பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியத்துக்கு முன் 109 இந்த மரபு இருந்திருக்கிறது. முன்னமேயே இருந்ததனால் தான், இடைச்சங்கநூலாகிய தொல்காப்பியமும், பறவைகளை நோக்கிக் கூறுவது உண்டு என்று தெரிவித்துள்ளது. இதனைத் தொல்காப்பியம் - செய்யுளியலில் உள்ள ' ஞாயிறு திங்கள் அறிவே நானே கடலே கானல் விலங்கே மரனே புலம்புறு பொழுதே புள்ளே நெஞ்சே அவையல பிறவும் நுதலிய நெறியால் சொல்லும் போலவும் கேட்கும் போலவும் சொல்லியாங் கமையும் என்மனார் புலவர். (192) என்னும் நூற்பாவாலும், தொல்காப்பியம் பொருளியலில் உள்ள, " சொல்லா மரபின் அவற்றொடு கெழீஇச் செய்யா மரபில் தொழிற்படுத் தடக்கியும் என்னும் நூற்பாவாலும், தொல்காப்பியம், மெய்ப்பாட் டியலில் முட்டுவயிற் கழறல் (23) என்று தொடங்கும் நூற்பாவில் உள்ள, தூது முனிவின்மை’ என்னும் பகுதிக்கு, "புள்ளும் மேகமும் போல்வன கண்டு சொல்லுமுன் அவர்க்கு என்று துதிரந்து பன்முறையானும் சொல்லுதலும் என்று பேராசிரியர் எழுதியுள்ள உரையானும், இன்ன பிறவற்றாலும் தெரியலாம். இதுகாறும் முதுநாரை, முதுகுருகு என்னும் நூல்கள் பற்றி இரண்டு கருத்துக்கள் கூறப்பட்டன. களிற்றியானை நிரை போன்ற பாடல்களின் தொகுப்பாகிய களிற்றியானை திரை, என்ற நூலைப் போல, நாரை - குருகு மாதிரி நீண்ட இசைப் பாடல்களின் தொகுப்புக்களே முதுநாரை, முதுகுருகு என்னும் நூல்கள் - என்ற முதல் கருத்தை ஒரளவு சிலராயினும் ஏற்றுக்கொள்ளலாம். அடுத்து,- நாரையை - குருகை நோக்கிக் கூறுவது போலவோ, அல்லது வேறு பிற கோணங்களிலோ நாரையோடு - குருகோடு தொடர்புடைய பாடல்களின் தொப்புக்களே முதுநாரை, முதுகுருகு என்னும் நூல்களாகும். என்ற இரண்டாவது கருத்தை ஏற்பதில் தயக்கம் ஏற்படலாம்.