பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியத்துக்கு முன் 111 அடியார்க்கு நல்லார் இவ்விரு நூல்களும் இசைத்தமிழ் நூல்கள் என்னும் குறிப்புமட்டும் தந்துள்ளார். இவற்றிற்கு இப் பெயர்கள் வைக்கப்பட்ட தன் காரணத்தையும் ஈண்டு நாம் ஆராய்ந்துள்ளோம். எனவே, பரிபாடல் போலவே, முதுநாரை, முதுகுருகு என்னும் நூல்களும் இசைத்தமிழ் பாடல்களின் தொகுப்பு நூல்களாய் இருக்கலாம். 4 களரியாவிரை இனி, இறையனார் அகப்பொருள் உரையில் தலைச்சங்க நூல்கள் என்னும் பெயரில் நான்காவதாகக் குறிப்பிடப்பட் டுள்ள, களரியா விரை' என்னும் நூல் குறித்துச் சிறிது ஆய்வோம். களரி என்பது, களம், நிலம், காடு முதலியன வாக இடப் பொருளைக் குறிக்கும். ஆவிரை என்பது ஒரு வகைப் பூ. எனவே, (களரி-ஆவிரை-) களிரியாவிரை என்பது, களரியில் பூத்துள்ள ஆவிரம் பூ என்று பொருள் படும். ஆவிரை என்பது நூல் வழக்காற்றுச் சொல்லாகும். நூல் வழக்காறு என்றால், இன்று நேற்றுத் தோன்றிய நூலில் அன்று. இந்தச் சொல் வழக்காறு, அகநானூறு, குறுந் தொகை, கலித்தொகை, பதிற்றுப்பத்து, குறிஞ்சிப்பாட்டு முதலிய கடைச்சங்க நூல்களில் இருப்பதோடல்லாமல், இடைச் சங்க நூலாகிய தொல்காப்பியத்திலும் உள்ளது. இதனை : தொல் காப்பியம் - எழுத்ததிகாரம் - உயிர் மயங்கியலில் உள்ள 'பனையும் அரையும் ஆவிரைக் கிளவியும் கினையுங் காலை அம்மொடு சிவனும் ஐயென் இறுதி அரைவரைந்து கெடுமே மெய் அவண் ஒழிய என்மனார் புலர் வ' (81) என்னும் நூற்பாவால் உணரலாம். இந் நூற்பாவில் பனை அரை, ஆவிரை என்னும் மூன்று மரவகைப் பெயர்ச் சொற் களுக்குப் புணர்ச்சிவிதி கூறப்பட்டுள்ளது. தொல்காப்பியர், தமிழில் உள்ள எல்லாச் சொற்களையும் சிறப்பாக எடுத்துக் குறிப்பிட்டுப் புணர்ச்சி விதி கூறிக் கொண்டிருந்தால் கட்டுபடியாகாது-காலம் போதாது; எனவே, மக்கள் வழக் கில் மிகுதியாக உள்ள இன்றியமையாத சில சொற்களை மட்டுமே எடுத்துக் கொண்டு புணர்ச்சிவிதி கூறியுள்ளார்