பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 தமிழ் நூல் தொகுப்புக் கலை ஆசிரியர். இதனால், அந்தக் காலத்தில் ஆவிரை' என்னும் சொல் மக்களிடையே பெரிதும் வழக்காற்றில் இருந்தது என்னும் நுட்பமான செய்தி புலனாகிறது. இந்த அடிப்படை யுடன் களரியா விரை' என்னும் நூற்பெயருக்கு வருவோம். இந்த நூல், ஆவிரஞ் செடி-கிளை-பூ முதலியவற்றைப் பற்றி விரிவாக விளக்கும் மரவியல் துறை (Botany) நூலாக இருக்க முடியாது. இதற்காக ஒரு தனி நூல் அந்த நாளில் தோன்றியிருக்க முடியாது. காட்டில் மலர்ந்து கண்ணைக் கவரும் ஆவிரம் பூக்களின் கொத்தைப் போல, நாட்டில் மலர்ந்து கற்பவரின் கருத்தைக் கவரும் பாடல்களின் கொத்தே அதாவது-பாடல்களின் தொகுப்பே-களரியா விரை என்னும் நூலாகும். களிற்றியானை நிரை, நான்மணிக்கடிகை, திரிகடுகம் முதலிய நூல்களின் பெயர்களைப் போலவே, பூங்கொத்தைக் குறிக்கும் களரியாவிரை' என்னும் பெயரும் உவமையாகு பெயராய் ஒரு நூலைக் குறிக்கலாயிற்று. - வழக்காற்றில் மிகுதியாக உள்ள சில சொற்களுக்கு மட்டுந்தான் தொல்காப்பியர் சிறப்பாகக் குறிப்பிட்டுப் புணர்ச்சி விதி கூறமுடியும் என்று முன்னர்ப் பேசினோம். ஆம்! தொல்காப்பியப் புணர்ச்சிவிதியில் இடம் பெற்றுள்ள ஆவிரம்பூ வழக்காற்றில் மிகுதியாக உள்ளதேயாகும். புதுச்சேரித் தெரு வில் அடிக்கடி ஆவிரம்பூ விற்பதைக் காணலாம். ஒரு கிழவி அடிக்கடி எங்கள் வீட்டிற்கு வந்து, 'ஆவாரம் பூ வாங்கலியா - ஆவாரம்பூ வாங்கலியா? என்று கேட்டு உயிரை வாங்குவாள். எங்கள்வீட்டிலும் அடிக்கடி ஆவிரம் பூக் கூட்டுக்கறி ஆக்குவ துண்டு. ஆவிரம் பூ அடிசிலுக்கே யன்றி, மாலையாகத் தொடுத்து அணிந்து கொள்ளவும் பயன்படுகிறது. இந்தச் செய்தியைச்சங்க இலக்கியங்களில் பரக்கக் காணலாம். பெண்கள் ஆவிரம் § மாலையைத் தம் மார்பிலே அணிந்து கொள்வர்; அம்மாலை அவர்தம் முலைகளின்மேல் அசைந்தாடிக் கொண்டிருக்கும் என்னும் செய்தியை,