பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியத்துக்கு முன் 115 தெரிந்ததிலிருந்து தெரியாததற்குச் செல்லுதல் என்னும் உளநூல் முறைப்படி ஒன்று காண்போம். இன்று பாவேந்தர் பாரதிதாசனுடைய பாடல்களின் தொகுப்புநூல் ஒன்றுக்கு 'முல்லைக்காடு’ என்னும் பெயர் தரப்பட்டுள்ளது. இவ்வாறே, அன்று பாடல் தொகுப்பு நூல் ஒன்று, ஆவிரைக் காடுஆவிரைக் களரி அதாவது களரியாவிரை, என்னும் பெயர் பெற்றிருந்தது. இதுகாறும், இறையனார் அகப்பொருள் உரையில் தலைச் சங்க நூல்களாகக் குறிப்பிடப்பட்டுள்ள நான்கு நூல்களையுமே "தொகை நூல்கள்’ என்னும் கண்கொண்டு நாம் ஆராய்ந்து வந்தோம் எனலாம். ஒரு சிலர்க்கு இங்கே ஒர் ஐயப்பாடு எழலாம். அஃதாவது, தலைச்சங்கத்தில் இயற்றப்பட்ட நூல்கள் தனி முழுநூல்களாக இல்லாமல், பல உதிரிப் பாடல்களின் தொகுப்பு நூல்களாகவா இருந்திருக்கும்? என்ற ஐயப்பாடு தான் அது. எளிதில் விடை பகர்ந்து இந்த ஐயத்தைப் போக்க முடியும். கடைச்சங்க கால நூல்களாக இப்பொழுது நமக்குக் கிடைத்திருக்கும் நூல்களே தொகை நூல்களாக இருக்கும்போது, தலைச்சங்கத்து நூல்களின் தலையெழுத்து என்னவாயிருந்திருக்கக் கூடும்? இந்த வினாவே நமது விடை! மற்றும், புலவர்கள் பலர் சேர்ந்து முச் சங்கங்களிலும் தமிழ் ஆராய்ந்ததாக இறையனார் அகப் பொருள் உரை கூறியிருப்பது ஈண்டு நினைவுகூறத் தக்கது. குழுவாக உள்ள பலரும் பாடிய பாடல்களைத் தொகுத்து நூல் களாக உருவாக்குவது இயற்கையே. இந்தக் காலத்திலும் ஒரு மன்றத்தில் உள்ள அறிஞர்களின் ஆராய்ச்சிக்கட்டுரை களைத் தொகுத்து ஒரு நூலாக்கும் மரபு இருந்து வருகிற தல்லவா? இறையனார் அகப்பொருள் உரையின் தகுதி இறையனார் அகப்பொருள் உரைப் பகுதியை அகச் சான் றாகக் கொண்டு, தமிழ்நூல் தொகுப்புக்கலையின் பழமைப் பெருமையைப்பற்றி இதுவரை ஆராய்ந்தோம். இந்த ஆராய்ச் சிக்கு அகச் சான்றாகத் துணைபுரியும் அளவிற்கு இந்த