பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1} 6 தமிழ் நூல் தொகுப்புக் கலை இறையனார் அகப்பொருள் உரைக்கு உள்ள தகுதி என்ன? ஒரு சிலர்க்கு இப்படி ஒர் ஐயப்பாடு எழலாம் அல்லவா? இந்த உரை யில் தரப்பட்டுள்ள சில செய்திகள் கற்பனையென்றும், உரையி லுள்ள புள்ளி விவரங்கள் உண்மைக்குக் கூடுதலானவை என்றும் சிலர் எண்ணக் கூடும்.இருக்கலாம்-சில செய்திகள் மிகைப்படுத் தப்பட்டிருக்கலாம். ஆனால், எல்லாவற்றையுமே கற்பனை என்றோ, மிகைப்படுத்தப்பட்டவை என்றோ கூறிவிடுவதற் கில்லை. இந்தக் கருத்தை ஒழுங்கு செய்துகொள்ள, 'இறையனார் அகப்பொருள் என்னும் நூல் தோன்றிய வரலாறு குறித்தும், அதன் உரை தோன்றிய வரலாறு பற்றியும் ஈண்டு ஒரு சிறிது விவரிக்க வேண்டும். நூல் வரலாறு:-ஒரு காலத்தில் (கடைச்சங்க காலத்தில்) பாண்டிய நாட்டில் வற்கடம் (பஞ்சம்) ஏற்பட்டதால், புலவர் கள் அனைவரும் வெளியேறிவிட நூல்கள் அழிந்து போயின. பின்னர், வளம் ஏற்பட்டதும், மீண்டும் நூல்கள் கிடைக் கலாயின.தோன்றலாயின. ஆனால் பொருளதிகாரம் மட்டும் கிடைக்கவில்லை. பொருளதிகாரம் இயற்றவல்லாரும் வந்தாரிலர். எனவே,பாண்டிய மன்னன் இது குறித்துக் கவலை யுற்றான். அவனது கவலையைப் போக்க, இறையனாராகிய சிவபெருமான், ஓர் அகப் பொருள் நூல் இயற்றி யளித்தார். அதுதான் 'இறையனார் அகப்பொருள் என்னும் நூலாகும். இந் நூலுக்குக் களவியல் என்ற பெயரும் உண்டு. இந்நூல் தோன்றிய வரலாறாக இந்தக் கதை சொல்லப்படுகிறது. இந்தக் கதையிலிருந்து நாம் உறிஞ்சி எடுத்துக் கொள்ள வேண்டிய சாறாவது:-அகப்பொருள் இலக்கண நூல்கள் ஒரு காலத்தில் கிடைக்காமல் அழிந்தொழிந்து மறைந்து போயின. அந் நேரத்தில், பாண்டியன் இறைவனிடம் வேண்டி முறை யிட்டுக் கொண்ட விருப்பம் நிறைவேறும் வகையில், இறைய னார் என்னும் புலவரால் இந்த நூல் செய்தளிக்கப்பட்டது. - இதுதான் உண்மையாயிருக்க முடியும் இதைக் கொண்டு, இந்த நூலின் அருமை பெருமையை உணரலாம். இந்த நூல் தோன்றிய காலம் திட்ட வட்டமாகத் தெரியவில்லை. எப்படியும் இந்த