பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியத்துக்கு முன் 117 நூல் கடைச் சங்க காலத்திற்கு உட்பட்டதாகவே இருக்கக் கூடும். இனி, உரை வரலாறு வருமாறு;- இறைனார் அகப் பொருளுக்குக் கடைச் சங்கப் புலவர்கள் பலரும் உரை எழுதினர். அவர் உரைகளுள் எவர் உரை சிறந்தது என்று தேர்ந்தெடுக்கும் தலைமைப் பொறுப்பு, இறையனார் ஆணைப் படி, உப்பூரிகுடி கிழார் மகனாவான் உருத்திரசன்மன் என்பவ னுக்கு அளிக்கப்பட்டது. அவனோ, பைங்கண்ணன், புன்மயிரன், ஐயாண்டு அகவையன், ஒர் ஊமைப்பிள்ளை யாவான். இவன் முருகனின் மறு பிறவி என்று சொல்லப் படுகிறான். இவன் முன்னிலையில் புலவர்கள் தத்தம் உரைகளைப் படிக்க வேண்டுமாம். எவர் உரையைப் படிக்கும் போது இவன் மகிழ்ச்சிக் கண்ணிர் சொரிந்து மெய்ம்மயிர் சிலிர்க்கின்றானோ அவர் உரையே சிறந்தது என்ற முடிவு முன் கூட்டியே இறைய னாரால் வகுத்துக் கொடுக்கப்பட்டது. அவ்வாறே உரைகள் படிக்கப்பட்டன. நக்கீரனாரின் உரை படிக்கப்பட்டபோது மட்டும் உருத்திரசன்மன் மகிழ்ச்சிக் கண்ணிர் சொரிந்து மெய்ம்மயிர் சிலிர்த்தான் எனவே, நக்கீரனாரின் உரையே சிறந்த உரை - உண்மையுரை என்ற தீர்ப்பு எல்லாராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. உரை தோன்றிய வரலாறாக இவ்வாறு கதை சொல்லப்படுகிறது. இந்தக் கதையிலிருந்து நாம் அறிய வேண்டுவதாவது:நக்கீரனாரின் உரையே சிறந்த உரையெனச் சங்கப் புலவர் களாலேயே ஏற்றுக் கொள்ளப்பட்டது; எனவே, நாளடைவில் மற்றவர் உரைகள் மறைந்துபோக, நக்கீரனார் உரையே நின்று நிலைத்தது என்பதாகும். ஆனால், இப்பொழுது நம் கையில் நடமாடுகின்ற இறையனார் அகப்பொருள்உரையில்-சில இடங்களில், நக்கீரனார் படர்க்கையில் குறிப்பிடப்பட்டிருப் பதால், இந்தவுரை நக்கீரனார் எழுதியதன்று-என்று சிலர் கூறு வர். இதனை உருத்திரசன்மன் எழுதிய உரை என்பாரும். உளர். இதற்குத் தீர்வு யாது? இப்பொழுது நாம் பெற்றிருக்கும் உரை முழுவதும்