பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 தமிழ் நூல் தொகுப்புக் கலை பகுதியின் ஓரிடத்தில், "...நாலாயிரத்து நானுாற்று நாற்பத் தொன்பதின்மர் எண்ணிறந்த பரிபாடலும் முதுநாரையும் முதுகுருகும் களரியா விரையும் உள்ளிட்டவற்றைப் புனைந்து தெரிந்து நாலாயிரத்து நானூற்று நாற்பதிற்றி யாண்டு இரீஇயினார்......' - எனக் கூறியிருப்பது காண்க. மற்றும், பாண்டி நாட்டுச் செவ்வூர்ச் சிற்றம்பலக் கவிராயரின் இல்லத் தில் இருந்த பழைய ஓலைச் 5೧. ஒன்றில் உள்ள ஒரு நீள மான அகவற் பாடலிலும் இச்செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது. அதிலிருந்து குறிப்பிட்ட பகுதி வருமாறு: "அனையர் கானான் காயிர நூற்றொடு நாற்பத் தொன் பதின்மர் பார்க்கிற் செந்தமிழோர் புரிந்தன செய்யுள் பெரும் பரிபாடலும் முதுமையடுத்த நாரையும் குருகும் கதியுறச் செய்த களரியா விரையும் ஆங்கவ ரிருந்ததும் அத்தொகை யாகும்......” இந்தப் பாடல் பகுதியில், தலைச்சங்க காலப் பரிபாடல் நூல், பெரும் பரிபாடல் எனக் கூறப்பட்டிருப்பது எண்ணத் தக்கது மற்றும், இந்த நான்கு நூல்களையும் செய்யுள்’ எனக் கூறி யிருப்பதை நோக்குங்கால், முது நாரையும் முதுகுருகும் இசைத் தமிழ் நூல்களாயினும், இசையிலக்கணம் கூறும் நூல்கள் அல்ல-இசைத் தமிழ்ப் பாடல்களின் தொகுப்பு நூல்களே என்பது புலனாகும். இவ்வாறு, இன்னும் பலர் இந்நூல்கள் பற்றிக் கூறியிருக்கலாம். தலைச்சங்ககாலத் தொகை நூல்களை இம்மட்டோடு நிறுத்திக்கொண்டுத், இனிக் கடைச்சங்க காலத் தொகை நூல்களைப் பற்றி ஆராய்வோம்.