பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. கடைச்சங்க காலத்துக்கு முன் இடைச் சங்க காலம் - தொல்காப்பியம் இடைச்சங்க நூலாகும். இதற்கு முற் பட்ட நூல்கள் தலைச்சங்க நூல்களாகும். அவை குறித்து முன்னர் ஆராய்ந்தோம். இடைச்சங்கப் புலவர்கள் தொல் காப்பியத்தை ஆதார நூலாகக் கொண்டு தமிழ் ஆராய்ந்த தாக இறையனார் அகப்பொருள் உரை கூறுகிறது. எனவே, மூவாயிரத்து எழுநூறு (3700) ஆண்டுக்காலம் நடைபெற்ற இடைச்சங்கத்தின் தொடக்கக் காலத்திலேயே தொல்காப்பியம் தோன்றிவிட்டிருக்க வேண்டும். தொல்காப்பியத்தை ஒட்டிய காலமும், அதற்குப் பிற்பட்ட காலமும், கடைச்சங்கம் தோன்றியதற்கு முற்பட்ட காலமும், இடைச்சங்க காலம்’ எனப்படும். இந்தக் காலத்தில் தோன்றிய நூல்களாக, “அவர் களாற் பாடப்பட்டன. கலியும், குருகும், வெண்டாளியும், வியாழமாலை அகவலும் என இத்தொடக்கத்தன என்ப’என்று இறையனார் அகப்பொருள் உரை, நான்கு நூல்களைப் பெயர் சுட்டிக் குறிப்பிட்டுள்ளது. இனி, இந்நான்கனுள் ஒவ் வொன்றையும் பற்றித் தனித் தனியே ஆராய்வோம். 5. கலி தலைச்சங்கத்தனவாக நான்கு நூல்கள் முன்னர்க் கூறப் பட்டுள்ளன. நமது ஆராய்ச்சியின்படி அந்த நான்கினையும் தொகை நூல்களாகக் கொள்ளின், இந்தக் கலி' என்னும் நூலினை ஐந்தாவது தொகை நூலாகக் கொள்ளலாம். 'மிரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்னும் பழமொழிக்கு ஏற்ப, தொகை நூல்களைப் பற்றி நூல் எழுதத் தொடங்கின், எந்த நூலைப் பார்த்தாலும் தொகை நூல் என்று கூறி விடுவதா? அப்படியில்லை. உண்மையில் கலி' என்பது, ஒரு தொகை நூல்தான். கலி' என்பது பாடல் வகைகளுள் ஒன்றாகிய கலிப்பாவைக் குறிக்கும் என்பது அனை வரும் அறிந்த செய்தி. எனவே அகப்பொருள் பற்றிய பல கலிப்பாக்களின் தொகுப்பே இந்தக் கலி' என்னும் நூல் என் பது போதரும்.