பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 தமிழ் நூல் தொகுப்புக் கலை இந்தக் கருத்தை உறுதிப்படுத்த நாம் பெரிய முயற்சி எடுத்துக் கொண்டு தொல்லைப்பட வேண்டியதில்லை. இப் பொழுது நமக்குக் கிடைத்திருக்கின்ற கடைச்சங்க காலப் பரிபாடல் தொகை நூலைப் போலவே, தலைச்சங்க காலத்தி லும் ஒரு பரிபாடல் தொகை நூல் இருந்தது என்பதை முன் னர்க் கண்டோம். இவ்வாறே, இப்பொழுது நமக்குக் கிடைத்தி ருக்கின்ற கடைச்சங்க காலக் கலித்தொகை நூலைப் போலவே இடைச்சங்க காலத்திலும் ஒரு கலித்தொகைநூல் இருந்திருக் கிறது. அந்த நூல்தான் இந்தக் கலி' என்பது. பரிபாடலும் ஒருவகை இசைப் பாவினத்தைச் சேர்ந்ததாகும். கலியும் ஒரு வகை இசைப்பாவாகும். இதனைத் தொல்காப்பியம்-செய்யுளி யலில் (242) பேராசிரியர் எழுதியுள்ள, அவையாவன, கலியும் பரிபாடலும் போலும் இசைப்பாட்டாகிய செந்துறை மார்க்கத்தன வென்பது”.-என்னும் உரைப்பகுதியாலும், அதே (242) நூற்பா உரையில் நச்சினார்க்கினியர் எழுதியுள்ள, 'அவ்வாறு வருவன, கலியும் பரிபாடலும் போலும் இசைப் பாட்டாகிய செந்துறை மார்க்கத்தன என்றுணர்க' - என்னும் பகுதியாலும் அறியலாம். எனவே, பரிபாடல் தொகைநூலைப் போலவே கலித்தொகை நூலும் பாவின் அடிப்படையில் தொகுக்கப்பட்டுப் பாவால் பெயர் பெற்றதாகும். இதனைப் 'பெருங் கலித்தொகை என்னும் பெயரால், செவ்வூர்ச் சிற்றம் பலக்கவிராயர் வீட்டு ஒலைச்சுவடிப் பாடல் குறிப்பிடுகிறது. 6. குருகு அடுத்தபடியாகக் குருகு' என்னும் நூல் குறிப்பிடப் பட் டுள்ளது. தலைச்சங்கத்தனவாகக் குறிப்பிடப்பட்டுள்ள முது நாரை, முதுகுருகு என்னும் நூல்கள் பற்றிக் கூறியுள்ள கருத் துக்களை யெல்லாம் இதற்கும் கொள்ள வேண்டும். அங்ங்ண மெனில், இஃதும் தமிழிசைப் பாடல் தொகை நூல் என்பது போதரும். 7. வெண்டாளி குருகைத் தொடர்ந்து வெண்டாளி என்னும் நூல் கூறப் பட்டுள்ளது. களரி யாவிரையைப் போலவே வெண்டாளி