பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடைச்சங்க காலத்துக்கு முன் 123 என்பதும் ஒருவகை மலராகும். தாளி என்னும் பெயரில் மலரும் உண்டு-செடியும் உண்டு-கொடியும் உண்டு. இங்கே "வெண்மை’ என்னும் அடைமொழி சேர்க்கப்பட்டுள்ளது. வெண்டாளி மலரால் தொடுக்கப்பட்ட மாலையை அணிந்து கொள்வது உண்டு. காட்டுமல்லிகையோடு வெண்டாளி மலரை யும் மாலையாகத் தொடுத்து, வேலன் அணிந்து கொள்வதாகத் திருமுருகாற்றுப்படை கூறுகிறது. 'குளவியொடு வெண்கூதா ளம் தொடுத்த கண்ணியன்' என்பது திருமுருகாற்றுப்படை (192) அடியாகும். குளவி என்பது காட்டுமல்லிகை. கூதாளம் என்பது வெண்டாளி. கண்ணி என்பது மாலை. இந்த அடிக்கு நச்சினார்க்கினியர் எழுதியுள்ள, “காட்டுமல்லிகையுடனே வெண்டாளியையும் கட்டின கண்ணியை யுடையனாய்” - என் னும் உரைப்பகுதியைக் காண்க. இதனால் வெண்டாளிக்குக் கூதாளம் என்னும் பெயரும் உண்டு என்பதை அறியலாம். இன்னும், இதனைப் பட்டினப்பாலையில் உள்ள, வெண்கூதா ளத்துத் தண் பூங் கோதையர்" (அடி-85) என்னும் பகுதிக்கு நச்சினார்க்கினியர் எழுதியுள்ள, வெண்டாளியினது தண்ணிய பூவாற் செய்த மாலையினையுடையராய்'- என்னும் உரைப் பகுதியானும் தெளியலாம். வெண்டாளி என்பதற்கும் கூதாளம் என்பதற்கும் சொல் லமைப்பிலும் நெருங்கிய தொடர்புண்டு. கூதாளி' என்னும் சொல்லே கூதாளம், கூதளம் என்றெல்லாம் ஆயிற்று என்று நச்சினார்க்கினியர் தொல்காப்பிய உரையில் கூறுகின்றார். தொல்காப்பியம்-எழுத்ததிகாரம் உயிர் மயங்கியலில் உள்ள "புளிமரக் கிளவிக்கு அம்மே சாரியை' (42) “ஏனைப் புளிப்பெயர் மெல்லெழுத்து மிகுமே” (43) "வல்லெழுத்து மிகினும் மானம் இல்லை ஒல்வழி யறிதல் வழக்கத் தான” (44) என்னும் நூற்பாக்களின் இறுதியில் நச்சினார்க்கினியர் எழுதி யுள்ள உரையிலிருந்து ஒரு பகுதி வருமாறு: "...வழக்கத்தான என்றதனான் இவ் வீற்றுக்கண் எழுத் தோத்தும் இலேசுமின்றி வருவன எல்லாவற்றிற்கும் ஏற்குமாறு