பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடைச்சங்க காலத்துக்கு முன் 125 'நாறிதழ்க் குளவியொடு கூதளம் குழைய' (380) என்னும் பகுதியாலும், அகநானூற்றில் உள்ள 'குளவியொடு மிடைந்த கூதளங் கண்ணி” (272) 'விசும்பு விசைத்தெறிந்த கூதளங் கோதையின்’ (273) என்னும் பாடல் பகுதிகளாலும் அறிந்து கொள்ளலாம். மற்றும், வெண்டாளி என்னும் பெயருக்கு ஏற்ப இம் மலர் வெண்மை நிறம் உடையது என்பதனைப் பட்டினப்பாலையாலும், முருகாற் றுப்படையாலும் முன்னர் அறிந்ததன்றி, மேலும் குறுந்தொகை யில் உள்ள வெண்கூதாளத் தந்தும்பு புதுமலர்' (282) என்னும் பகுதியாலும், அகநானூற்றில் உள்ள பைம்புதல் நனிசினைக் குருகிருந் தன்ன வண்பிணி யவிழ்ந்த வெண்கூ தாளத்து' (178 ‘விசும்பு விசைத்தெறிந்த கூதளங் கோதையின் பசுங்கால் வெண்குருகு வாப்பறை வளைஇ ஆர்கலி வளவயிற் போதொடு (273) என்னும் பாடல் பகுதிகளாலும், சிலப்பதிகாரத்திலுள்ள ‘விரிமலர் அதிரலும் வெண்கூ தாளமும்’ என்னும் (13 - 156) பகுதியாலும் அறியலாம். கிளையில் வெள்ளைக் குருகு அமர்ந்திருப்பதுபோல, வெண்டாளி மலர் கள் கொத்துக் கொத்தாகப் பூத்துள்ளன என்றும், வெண்டாளி மாலையை விண்ணில் விரைந்து எறிந்தாற்போல வெள்ளைக் குருகு சிறகடித்து விண்ணில் விரைந்தெழுந்து சென்றது என் றும், அகநானூற்றுப் பாடல் (178,273) பகுதிகளில் கூறியிருப் பது ஈண்டு மகிழ்தற்குரியது. எனவே, மேற்காட்டியுள்ள இலக் கிய அகச் சான்றுகளைக் கொண்டு, கூதாளம் என்பது, வெண்மையான வெண்டாளி மலரே என்னும் உண்மை நன்கு புலனாகும். ஒரு நூலுக்குப் பெயராக வைக்கும் அளவிற்கு வெண்டாளி