பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடைச்சங்க காலத்துக்கு முன் 127 என்னும் பகுதியாலும் அறியலாம். குறுந்தொகையில் உள்ள "ஒராங்கு அவிழ்ந்த வெண் கூதாளம்' என்னும் தொடருக்கு, ஒருசேரத் தொகுப்பாய் மலர்ந்திருக்கிற வெண்டாளி' என்பது பொருளாம். அகநானூற்றில் உள்ள அமன்ற கூதளம்' என்ப தற்கு, நெருங்கிய - நிறைந்த - திரண்ட வெண்டாளி என்பது பொருளாம். அமன்ற என்பதற்கு அமல் பகுதியாகும். அமல் - அமலை என்றால் திரட்சி என்று, பொருளாம். எனவே, பாடல்களின் திரட்சியாகிய - தொகுதியாகிய ஒரு நூலுக்கு வெண்டாளி' என்னும் பெயர் வைத்தது பொருத்தமே. இதை ஒட்டினாற்போல் இன்னொரு கருத்தும் சொல்ல வேண்டியுள்ளது. ஆவிரம் பூ கொத்துக் கொத்தாக மலர்ந் திருப்பது போல, வெண்டாளியும் கொத்துக் கொத்தாக-குலை குலையாக மலர்ந்திருக்கும். இதனை, அகநானூற்றில் உள்ள 'பைம்புதல் நளிசினைக் குருகிருந் தன்ன வண்பிணி அவிழ்ந்த வெண்கூ தாளத்து அலங்குகுலை அலரி தீண்டித் தாதுக’ என்னும் பாடல் (178) பகுதியால் நன்கறியலாம். வெண்டாளி மலர் குலைகுலையாய் - கொத்துக் கொத்தாய் மலர்ந்திருக் கும் காட்சி, கிளையில் வெள்ளைக் குருகு அமர்ந்திருக்கும் தோற்றம்போல் தெரிகிறதாம். வெண்டாளி மலர் குலை குலையாக இருப்பதனால்தான் வெண்குருகுபோலத் தோன்று வதாகப் புலவர் பாட முடிந்தது. ஒரு பாடல் தொகைநூலுக்கு வெண்டாளி என்னும் பெயர் சூட்டியது மிகவும் பொருத்தம் என்பதை உறுதிசெய்ய இந்த அகச்சான்று ஒன்றே போதுமே? பல மலர்கள் சேர்ந்தது ஒரு குலை-ஒரு கொத்து, இதே போலப் பல பாடல்கள் சேர்ந்தது ஒரு தொகைநூல். இதுகாறுங் கூறியவற்றிற்கு மகுடம் வைத்தாற்போன்ற அமைப்புடைய ஒரு பாடலை இனிப் பார்ப்போம். முதலில் அந்தப் பாடலின் கருத்து வருமாறு: - ஒரு பெண்யானை தன் கணவனாகிய களிற்றைக் காணாது, காட்டுச் சோலையில் மயங்கித் தேடித் திரிகிறது. ஆண் யானையோ, அப்பக்கமாகப் போன அரிமாவுக்கு அஞ்சிக் காட்டுச் செறிவில் மறைந்து