பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 தமிழ் நூல் தொகுப்புக் கலை கொண்டிருக்கிறது. காட்டுச் செறிவிலிருந்து தன்னை வேறு பிரித்துக் கண்டுபிடிக்க முடியாதபடி களிறு மறைந்திருப்பது எதுபோன் றிருக்கிறதெனில், வெண்டாளி மலர்கள் கொத்துக் கொத்தாக நிரம்பப் பூத்திருக்கும் கிளையில் ஒருவெண் குருகு அமர்ந்து தன்னை வேறுபிரித்து அறியமுடியாத படி மறைந் திருப்பது போன்றிருக்கிறது. இந்த நயமான கருத்தமைந்த இனிய பாடல், யாப்பருங்கலத்தின் 30,49ஆம் நூற்பாக்களின் உரையிடையே மேற்கோளாகத் தரப்பட்டுள்ளது; பாடல் வரு மாறு: 'குருகு வெண்டாளி கோடுபுய்த் துண்டென மாவழங்கு பெருங்காட்டு மழகளிறு காணாது மருள்பிடி திரிதருஞ் சோலை அருளா னாகுதல் ஆயிழை கொடிதே." இந்தப் பாடலால், வெண்டாளி வெண்மையானது கொத் துக் கொத்தாக- குலையாகப் பூக்கக்கூடியது, குருகுக்கும் கொத்துக்கும் வேறுபாடு தெரியாத தோற்றம் உடையது; சோலையில் பூத்து மணந்து பொலிவுற்றிருப்பது- என்னும் கருத்துக்களை அறியலாம். இந்தக் கருத்துக்கள் முன்னரே கூறப்பட்டிருப்பினும், கூதளம் - கூதாளம் என்னும் ஒட்டுப் பெயரால் சங்க நூல்களிலிருந்து எடுத்துக் காட்டப்பட்டன: ஆனால் இந்தப் பாடலில். வெண்டாளி என்னும் நேர்ப் பெயராலேயே கூறப்பட்டிருப்பது விதந்து குறிப்பிடத் தக்க தாகும். வெண்டாளி என்னும் பெயரால்தானே நூலின் பெயர் வழங்கப்படுகிறது! வெண்டாளி மலரின் மேன்மையை விளம்ப இங்கே இன் லுமொரு செய்தி காத்துக் கிடக்கிறது. அந்தக் கால வழக் கப்படி, தினைப் புனம் காப்பதற்காகத் தலைமகள் ஒருத்தியும் அவள் தோழியும் சில நாட்களாகச் சோலைப்பக்கம் வந்து தங்கியிருந்தனர். தினை முதிர்ந்துவிட்டது. அறுவடை நடக்கப் போகிறது. இனி இவர்கட்கு இங்கு வேலையில்லை. பொழில் புறத்தை விட்டு ஊருக்குத் திரும்ப வேண்டியதுதான்.இதனைத் தோழி தலைவியிடம் தெரிவிக்கின்றாள். தலைவியே! தினை