பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 தமிழ் நூல் தொகுப்புக் கலை கூதாளமே மிகுதியாயுள்ளது. தாமரை இனத்தில் வெண்டா மரை குறைவு; செந்தாமரை மிகுதி. இதற்கு நேர்மாறாக, கூதாள இனத்தில் செங்கூதாளம் குறைவு, வெண்கூதாளமே மிகுதி. எனவேதான், மக்களிடையேயும் புலவர்களிடையேயும் வெண்கூதாளம் இத்துணை பெருமை பெற்றுள்ளது. அதனால் தான், பல பாடல்களின் தொகுப்பு நூலுக்கு வெண்டாளி' என்னும் விருப்பமான பெயர், இடைச்சங்க காலத்தில் இட்டு வழங்கப்பட்டது. w இதுகாறுங் கூறியவற்றால், இடைச்சங்க காலத்தாய வெண்டாளி என்னும் நூல், தலைச்சங்க காலத்தாய களரியா விரை என்னும் நூலைப்போல், பூவின் பெயரால் வழங்கும் ஒரு தொகை நூல் என்னும் முடிபு பெறப்படும். களரியா விரை என்னும் நூலின் பேரால் முன்பு கூறியுள்ள பொதுச் செய்தி களை யெல்லாம் வெண்டாளி என்னும் இந்நூலுக்கும் கொள்க. 8. வியாழ மாலை அக்வல் வெண்டாளியை யடுத்து, 'வியாழ மாலை அகவல்' என் னும் நூல் இறையனார் அகப்பொருள் உரையில் குறிப்பிடப் பட்டுள்ள தல்லவா? இந்த நூலும் ஒரு தொகை நூலாகத்தான் இருக்கமுடியும். தொகை நூல் என்னும் அறிவிப்பு, நூலின் பெயரிலேயே பட்டையாக எழுதப்பட்டுள்ளது. அதுதான் ‘மாலை என்பது. உலகத் தொகை நூல்கள் பல மாலை" என்னும் பெயர் உடையன்வாய் உள்ளமையும், ஆந்தாலஜி - ஆந்தொலொழியா என்பதற்கு மாலை' என்பது பொருள் என்னும் செய்தியும், கிரீக் மொழியின் முதல் தொகை நூலுக்கு ‘மாலை (Garland) என்று பெயர் என்னும் செய்தியும் முன்னரே நமக்குத் தண்ணீர் பட்டபாடு -அதாவது-நாம் நன்கு அறிந்த செய்திகளாகும். எனவே, ‘மாலை என்னும் பெயரைக் கொண்டுள்ள வியாழமாலை அகவல் என்னும் நூல், பல பாக்களின் தொகுப்பாகிய பாமாலையே யாகும். இந்த நூற்பெயரின் இறுதியிலே ‘அகவல்’ என்னும் ஒரு சொல் இருக்கக் காணலாம். அகவல் என்பது பா வகையுள்