பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடைச்சங்க காலத்துக்கு முன் 129 முதிர்ந்து விட்டது. நமது வேலையும் முடிந்தது. இனி நாம் இந்தப் பொழில் (சோலை) தனித்துப் புலம்பும்படி நம் ஊருக்கு மீண்டு செல்ல வேண்டும் போல் தோன்றுகிறது., - இது தோழி கூற்று. இதனை நற்றிணையிலுள்ள 'கூதள நறும் பொழில் புலம்ப ஊர்வயின் - மீள்குவம் போலத் தோன்றும்' (313) என்னும் பாடல் பகுதி அறிவிக்கிறது. தாங்கள் பிரிந்து விடின், பொழில் தனித்துப் புலம்பும் எனக் கவலைப்படுகிறார்கள். அந்தப் பொழில் எத்தகையது? நறுமணம் மிக்கது. அந்த நறு மணம் எதனால் கிடைத்தது? கூதள (வெண்டாளி) மலர் களால் கிடைத்தது. அந்தப் பொழிலுக்குப் பெயர் என்ன? கூதள நறும் பொழில்-வெண்டாளிச் சோலை. எனவே, இந்தப் பெண்களுக்கு விெண்டாளி மலர்ச் சோலை விருப்பத்திற்கு உரிய இடம் என்பது புலப்படும். இவ்வாறாக, மக்களிடையேயும் புலவர்களிடையேயும் பெரிய செல்வாக்குப் பெற்றிருந்த வெண்டாளியின் பெயரால் ஒரு தொகை நூல் வழங்கப்படுவதில் வியப்பென்ன இருக்க முடியும்! இங்கே மற்றொரு கருத்தையும் நினைவு செய்ய வேண்டி யுள்ளது. தாமரை மலரில் வெள்ளையும் உண்டு - சிவப்பும் உண்டு. வெள்ளையினின்றும் வேறு பிரித்துணர்த்தச் செந் தாமரை” என்றும், சிவப்பினின்றும் வேறு பிரித்தறிவிக்க 'வெண்டாமரை” என்றும் அதற்குப் பெயர் வெவ்வேறாக வழங் கப்படுவதைக் காண்கிறோம். அதேபோல, வெண் கூதாளம்வெண்டாளி என்றால், செங்கூதாளம் ஒன்று இருக்க வேண்டுமே! ஆம், உண்டு - செங்கூதாளமும் இருக்கிறது. இதனை, சிலப்பதிகாரம் ஊர்காண் காதையில் உள்ளது. 'சிறுமலைச் சிலம்பிற் செங்கூ தாளமொடு நறுமலர்க் குறிஞ்சி நாண்மலர் வேய்ந்து' என்னும் (அடி 88) பகுதியில் தெளிவாக உணரலாம். எனவே, செங்கூதாளமும் இருப்பினும் அது சிறுபான்மையது. வெண்