பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடைச்சங்க காலத்துக்கு முன் 131 ஒன்று. எனவே, இந்நூல் அகவற் பாக்களின் தொகுப்பாய் இருக்கலாம். இதனை உறுதி செய்ய, ஈண்டு மீண்டும், இறைய னார் அகப்பொருள் உரைப் பகுதி வருமாறு: "அவர்களாற் பாடப்பட்டன கலியும், குருகும், வெண்டாளியும், வியாழ மாலை அகவலும் என இத்தொடக்கத்தன என்ப"-என்பது உரைப் பகுதி. இதில் குறிப்பிட்டுள்ள வியாழமாலை அகவலும் என்னும் நீளமான பெயருக்குப் பதிலாக, வேறோர் ஒலைச் சுவடியில் ‘அகவலும்’ என்னும் ஒரே ஒரு சொல்தான் இருக்கிறது: 'வியாழ மாலை' என்னும் சொல் அந்த ஒலைச் சுவடியில் இல்லை. இதிலிருந்து, வியாழ மாலை அகவல் என் னும் நூல், சுருக்கமாக ‘அகவல்' என்னும் பெயராலும் குறிக்கப் பட்டு வந்தது என்பது உய்த்துணரக்கிடக்கிறது. சீவக சிந்தாமணி என்னும் நூல் சிந்தாமணி எனவும், புறப் பொருள் வெண்பாமாலை என்னும் நூல் வெண்பாமாலை எனவும் இறுதிப்பகுதியால் பெயர் வழங்கப்படுவதுபோல, வியாழமாலை அகவல் என்னும் இந்த நூலும் அகவல்' என இறுதிப் பகுதி யால் அழைக்கப்பட்டுள்ளது. எனவே, பரிபாடல்; கலி என்னும் தொகை நூலைப் போலவே, ‘அகவல்’ எனப் LJmrg? 35r பெயரால் சிறப்பாக அழைக்கப்படும். இந்த நூல், ப்ல்வேறு அகவல் பாக்களின் தொகுப்பு நூல் என்பது தெளிவு. அகவல் என்பது, வெண்பா, ஆசிரியம், கலி, வஞ்சி என்னும் நால்வகைப் பாக்களுள் ஆசிரியப் பாவைக் குறிக்கும். ஆசிரியம் எனினும் அகவல் எனினும் ஒன்றே. யாப்பருங்கலக் காரிகை யாசிரியர் தமது நூலில் ஆசிரியப் பாவை அகவல்’ என்னும் சொல்லாலேயே எல்லா இடங்களிலும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் காரிகைக்கும் முற்பட்டதாகிய யாப்பருங்கலம், என் னும் முதல் நூலில், அகவல், ஆசிரியம் என்னும் இரு சொற் களும் மாறி மாறிப் பயன்படுத்தப் பட்டுள்ளன. இவ் விரண்டுக்கும் மிக மிக முற்பட்டதாகிய தொல்காப்பியத்தில் ஆசிரியம்’ என்ற சொல்லே எல்லா இடங்களிலும் பயன்படுத்தப் பட்டுள்ளது. ஆனால், தொல்காப்பியம் செய்யுளியலில் ‘அகவல் என்பது ஆசிரி யம்மே." (77)