பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#34 தமிழ் நூல் தொகுப்புக் கலை அகவிக் கூறுதல் என்பதற்குப் பேராசிரியர் கூறியுள்ள விளக் கத்தைப் பின்பற்றியே நச்சினார்க்கினியரும் சிறிது சுருக்கமான விளக்கம் தந்துள்ளார். அது வருமாறு:” "அகவிக் கூறலின் அகவ லாயிற்று. அதாவது, கூற்றும் மாற்றமும் ஆகி ஒருவன் கேட்ப அவற்கு ஒன்று செப்பிக் கூறாது தாங் கருதியவா றெல்லாம் வரையாது கூறுவது. அதனை வழக்கினுள் அழைத்தல்’ என்ப. அங்ங்ணம் கூறு மிடத்துத் தொடர்ந்து கிடந்த வோசை அகவலாம். அவை களம்பாடு பொருநர் கண்ணும், கட்டுங்கழங்கும் இட்டுரைப்பார் கண்ணும், தம்மின் உறழ்ந்துரைப்பார் கண் னும், பூசலிழைப்பார் கண்ணும் கேட்கப்படும். வழக்கின் கண் உள்ளதாய் அங்ங்ணம் அழைத்துக் கூறும் ஒசை ஆசிரியப்பா என்றவாறு.” (இது நச்சினார்க்கினியர் உரை) வினாவிடையாக ஒருவரோடொருவர் உரையாடுவது போல இன்றி, ஒருவர் தாம் விரும்பியபடியெல்லாம், உரத்துப் பேசுதலும், எடுப்பாகக் கத்திப் பேசுதலும், கூவிப்பாடுதலும், ஒருவரை அழைத்துக் கூறுவதுபோல் பாடுதலும், தெய்வம் ஏறிக் குறி சொல்லுவதுபோல் பாடுதலும் இன்ன பிறவும் அகவல்’ எனப்படும் - என்னும் செய்தியை ‘அகவல்' என்பது ஆசிரியம்மே, என்னும் தொல்காப்பிய நூற்பாவிற்கு உரை யாசிரியர்கள் மூவரும் கூறியுள்ள உரைப்பகுதிகளைக் கொண்டு அறியலாம். எனவே, பொதுவாக அகவல் என்றால், அகவுதல்அகவிக் கூறுதல்-கூவி அழைத்துப் பாடுதல் என்னும் பொருளுள் ளமை புலப்படும். அகவல் என்றால் அழைத்தல், எடுப்பான ஓசை என்றெல்லாம் நிகண்டுகள் பொருள் கூறுகின்றன. இதனை, - ‘அகவல் நான்குமஷ் வழைத்த லாகும்” என்னும் திவாகர நிகண்டு நூற்பாவாலும், பிங்கல நிகண்டில் உள்ள, ‘அகவல் என்பதும் அழைத்த லாகும்” (238)