பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடைச்சங்க காலத்துக்கு முன் 135 ‘அகவலும் எடுத்த லோசைப் பெயரே' (351) என்னும் நூற்பாக்களாலும் அறியலாம். அகவுதல் என்பதற்கு எடுப்பாக அழைத்தல் என்னும் பொருள் உள்ளமையைக் கடைச்சங்க நூல்கள் பலவற்றில் காணலாம். மாதிரிக்காக ஒன்று வருமாறு: மதுரைக்காஞ்சியில் உள்ள, "வாளுழந்த தன்தாள் வாழ்த்தி நாளிண்டிய கல் அகவர்' (அடி 222-3) என்னும் பகுதியிலுள்ள அகவர்' என்பதற்கு, நச்சினார்க் கினியர் எழுதியுள்ள, ‘அகவர் என்றார், குலத்தோர் எல்லாரையும் அழைத்துப் புகழ்வர் என்பது பற்றி; ஆகுபெயர் ‘அகவல் போல'. என்னும் உரைப்பகுதி காண்க. தெய்வத்தையோ பிறரையோ அழைத்துப் புகழ்ந்து பாடுதலுக்கும் அகவல்’ என்ற பெயர் உண்டு. இவ்வாறு பாடும் பெண் ‘அகவல் மகள்’ என்றும், பாடும் ஆண் ‘அகவலன்' என்றும், வழங்கப்படுவர். இதனை, ‘அகவல் மகளே அகவல் மகளே மனவுக் கோப் பன்ன நன்னெடுங் கூந்தல் அகவல் மகளே பாடுக பாட்டே இன்னும் பாடுக பாட்டே அவர் நன்னெடுங் குன்றம் பாடிய பாட்டே' என்னும் குறுந்தொகைப் (23) பாட்டாலும், சிலப்பதிகாரம் நடுகற் காதையில் உள்ள, - 'அந்தீங் குறிஞ்சி அகவல் மகளிரின் மைந்தர்க்கு ஓங்கிய வருவிருந்தயர்ந்து என்னும் (அடி:25 - 36) பகுதியாலும், பதிற்றுப்பத்தில் உள்ள கண்டி துண்கோல் கொண்டுகளம் வ்ாழ்த்தும் அகவலன் பெறுக மாவே' - (43)