பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/161

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


கடைச்சங்க காலத்துக்கு முன் 137 பாக்களால் அன்று தொகுக்கப்பட்டிருந்தன என்னும் நுட்ப மான செய்தி புலனாகிறது. அவ்வளவு ஏன்? கடைச்சங்க காலத் தொகை நூலாகிய பத்துப் பாட்டு என்னும் தொகுப் பில் உள்ள பத்துப் பாடல்களுள் பொருநராற்றுப் படையும் மதுரைக் காஞ்சியும் வஞ்சியடிகள் இடையிடையே கலந்த ஆசிரியப்பாவால் ஆனவை; பட்டினப்பாலை வஞ்சியடிகளால் அமைந்து ஆசிரிய அடிகளால் முடிவது; இம்மூன்றும் தவிர மற்ற ஏழு பாட்டுகளும் முற்றிலும் ஆசிரியப்பாவால் ஆனவை. மற்றும், எட்டுத் தொகை எனப்படும் எட்டுத் தொகை நூல் களுள் பரிபாடலும் கலித்தொகையும் நீங்கலாக, மற்ற அக நானுாறு, குறுந்தொகை, நற்றிணை, புறநானூறு, ஐங்குறு நூறு, பதிற்றுப்பத்து, என்னும் ஆறு தொகை நூல்களும் ஆசிரியப்பாக்களின் தொகுப்பே யன்றோ? மற்றும், ஆசிரியமாலை என்னும் பெயரில் ஒரு தொகை நூல் உள்ள மையும் ஈண்டு ஒப்பு நோக்கற்பாற்று. இத் தொகை நூல் பற்றி அடுத்த தலைப்பில் ஆராயப்படும். இதுகாறும், வியாழ மாலை அகவல்’ என்னும் நூற் பெயரில் உள்ள மாலை என்னும் சொல் பற்றியும், அகவல் என்னும் சொல் குறித்தும் விரிவாக ஆராய்ந்தோம். இவ்விரு சொற்களுமே இந்நூல் ஒரு தொகை நூல் என்பதனை உணர்த்தி நிற்கின்றன. இவையிருக்க, இவற்றுக்கு முன்னால் உள்ள வியாழம்' என்னும் சொல்லின் பக்கம் இன்னும் நாம் போகவே இல்லையே! இனி, வியாழம் என்னும் சொல் குறித்து ஒரு சிறிது ஆராயலாம்: வியாழம் என்ற சொல்லுக்கு வியாழக்கிழமை, ஒரு கோள் (கிரகம்), தேவ ஆசான், பாம்பு, ஒருவகை வட்டம் முதலிய பொருள்கள் உண்டு. நமது நூற் பெயரில் உள்ள வியாழம் என்னும் சொல், இந்தப் பொருள்களுள் எதனையும் குறிப்ப தாய் இருக்க முடியாது. ஏனெனில், இந்தப் பொருள்களை அடிப்படையாக வைத்து அந்தக் காலத்தில் ஒரு நூல் பாடி யிருக்க முடியாது. எனவே, இஃது எப்பொருள் பற்றியதாக இருக்கலாம்?