பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/164

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


140 தமிழ் நூல் தொகுப்புக் கலை 'இருங்கலி கடிந்த பெருங்கலித் தொகையொடு குருகு வெண்டாளி தெருள் வியாழ மாலை; அந்நாள் இலக்கணம் அகத்திய மதனொடு...' என்னும் பகுதி அறிவிக்கின்றது. இறையனார் அகப்பொருள் உரை, இந்த நான்கு நூல்களுள் முதலாவதைக் கலி' என்று மட்டுந்தான் குறிப்பிட்டுள்ளது. ஆனால் இந்தப் பாடல் பெருங் கலித் தொகை என்று கூறுகிறது. இப்பொழுது நமக்குக் கிடைத்திருக்கிற கடைச்சங்க நூலாகிய கலித்தொகையை நோக்க, இடைச்சங்கக் கலி பெரியதாதலின் பெருங்கலி என்று கூறியுள்ளது; இஃதும் ஒரு தொகை நூல் என்பதை அறிவிக்கவே பெருங் கலித்தொகை என்றும் கூறியிருக்கிறது. இவ்வாறாக, முதல்நூலாகிய கலி என்பதைத் தொகை' என்று சுட்டிக் கூறியிருப்பது, அடுத்தனவாகிய குருகு, வெண்டாளி, வியாழமாலை அகவல் என்னும் மூன்று நூல்களுங்கூடத் தொகை நூல்களே என்பதைக் குறிப்பாக உணர்த்துவதுபோல் தோன்றுகிறது. இந்த இடைச்சங்க காலத் தொகைநூல்களைப் பற்றி அடியார்க்கு நல்லாரும் சிலப்பதிகார உரைப் பாயிரத்தில் குறிப்பிட்டுள்ளார். அப் பகுதி வருமாறு: “......மூவாயிரத் தெழு நூற்றுவர் தம்மாற் பாடப் பட்ட கலியும் குருகும் வெண்டாளியும் முதலிய செய்யுள் இலக்கியம் ஆராய்ந்து செய்த உதயணன் கதையுள்ளும்...பிறவற்றுள்ளுங் கூறினமையானும்......” இந்த உரைப் பகுதியால், கலி, குருகு, வெண்டாளி, வியாழ மாலை, அகவல் என்னும் நூல்கள் செய்யுள்களால் தொகுக்கப்பட்ட இலக்கியங்கள் எனவும், இவற்றை ஆதார நூல்களாகக் கொண்டு ஆராய்ச்சி செய்து, பிற்காலத்தில் புல வர்கள் நூல்கள் இயற்றினர் எனவும் அறியலாம். இனி, இறையனார் அகப்பொருள் உரையில் குறிப்பிடப் படாமல், வேறு நூல்களின் வாயிலாக அறியப்பட்டுள்ள இடைச்சங்க காலத் தொகை நூல்களாகிய பன்னிரு படலம், பதினாறு படலம் என்னும் நூல்கள் குறித்து ஆராய்வோம்.