பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/165

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


9. பன்னிரு படலம் நூல் அறிமுகம் பன்னிரு படலம் என்பது ஒரு தொகை நூல். இலக்கணத் தொகை நூல். இஃது இதுகாறும் கிடைத்திலது. என்று கிடைக்குமோ? இப்படியொரு நூல் இருந்தது என்பதை, இப்பொழுது கிடைத்துள்ள சில நூல்களின் வாயிலாகத் தெரிந்துகொள்ள முடிகிறது. இறையனார் அகப்பொருள் உரை. புறப்பொருள் வெண்பாமாலை, யாப்பருங்கல விருத்தி யுரை, தொல்காப்பியம் - இளம்பூரணர் உரை, தொல்காப்பி யம்-பேராசிரியர் உரை, தொல்காப்பியம்-நச்சினார்க்கினியர் உரை, மதுரைக் காஞ்சி-நச்சினார்க்கினியர் உரை, மாறனலங் கார உரை, இலக்கண விளக்க உரை, சிவஞான முனிவரின் தொல்காப்பியப் பாயிர விருத்தியுரை முதலிய நூல்களில் பன் னிரு படலம் பற்றிய செய்திகள் பேசப்பட்டுள்ளன. இந் நூல் களிலுள்ள அகச்சான்றுகளைக் கொண்டு பன்னிரு படலத்தின் உண்மையை நம்ப முடிகிறது. பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த சிவஞானமுனிவர், தாம் எழுதிய தொல்காப்பியப் பாயிர விருத்தி உரையிலும், அதே நூற்றாண்டில் வாழ்ந்த வைத்தியநாத தேசிகர், நூலும் உரையுமாகத் தாம் எழுதிய தமது இலக்கண விளக்க உரையி லும் பன்னிரு படலச் செய்தி பற்றிப் பேசியிருப்பதால், இந்த நூல் பதினெட்டாம் நூற்றாண்டுவரையும் கிடைக்கப் பெற்று ஆட்சியில் இருந்திருக்கிறது-பின்னரே மறைந்து விட்டது என் பது புலனாகலாம். சிவஞான முனிவர், வைத்திய நாத தேசிகர் ஆகியோர் காலத்தில் பன்னிரு படலம் கிடைக்கப் பெற்று ஆட்சியில் இல்லை; தொல்காப்பிய உரையாசிரியர்களின் உரைக்குறிப்புக் களில் பன்னிரு படலத்தைப் பற்றியுள்ள செய்திகளை அடிப் படையாகக்கொண்டு இவர்கள் இருவரும் தத்தம் உரைகளில் பன்னிரு படலத்தைப் பற்றிக் கூறியுள்ளனர்' - என்று சிலர் சொல்லுவாராயின், தொல்காப்பிய உரையாசிரியர்களின்