பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 தமிழ் நூல் தொகுப்புக் கலை காலம் வரையிலுமாவது பன்னிரு படலம் ஆட்சியில் இருந்தது என நம்பலாம். தொல்காப்பிய உரையாசிரியர்கள் பன்னிரு படலத்திலிருந்து சில நூற்பாக்களை எடுத்துக்காட்டி நன்கு அலசி ஆராய்ந்து உரை எழுதியிருக்கின்றனராதலின், அவர் கள் காலத்தில் பன்னிரு படலம் ஆட்சியில் இருந்தது என்பதில் ஐயமே இல்லை. மேற்கூறிய தொல்காப்பிய உரையாசிரியர் களுள் காலத்தால் பிற்பட்டவர் நச்சினார்க்கினியர் ஆவார். இவரது காலம் பதினான்காம் நூற்றாண்டு ஆதலின், இந்தக் காலம் வரையிலுமாவது பன்னிரு படலம் ஆட்சியில் இருந்தது என்பது மறுக்கமுடியாத உண்மையாகும். அடுத்து, இந்த நூல் எப்பொழுது தோன்றியது? இதன் ஆசிரியர் யார்? எப்பொருள் பற்றியது இது? இதன் பெயர்க் காரணம் என்ன?-இந்த வினாக்களுக்கு விடை காண வேண் டும். இந்நூற் பெயர், முதல் முதலாக, காலத்தால் முற்பட்ட இறையனார் அகப்பொருள் உரையில் காணப்படுகிறது. நூல் கள் பெயர் பெற்றதற்கு உரிய காரணங்களை விளக்குமிடத்து, 'அளவினால் பெயர் பெற்றது பன்னிரு படலம் என்பது' என அகப்பொருள் உரை கூறுகிறது. இந்த நூல் பன்னிரண்டு படலங்களை உடைத்தாயிருப்பதனால், 'பன்னிரு படலம் என எண்ணல் அளவையால் பெயர் பெற்றது' என்பது, இந்த உரைப் பகுதியின் விளக்கமாகும். ஏழு அல்லது எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஐயனா ரிதனார் என்பவரால் இயற்றப் பெற்ற புறப் பொருள் வெண்பா மாலை என்னும் நூலின் சிறப்புப் பாயிரச் செய்யு ளால், பன்னிரு படலத்தின் ஆசிரியர் பற்றியும் அந்நூல் கூறும் பொருள் பற்றியும் அறிந்து கொள்ளலாம். எனவே, அந்தச் சிறப்புப் பாயிரச் செய்யுள் வருமாறு: “மன்னிய சிறப்பின் வானோர் வேண்டத் தென்மலை யிருந்த சீர்சால் முனிவரன் தன்பால் தண்டமிழ் தாவின் றுணர்ந்த துன்னருஞ் சீர்த்தித் தொல்காப் பியன் முதல்