பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/167

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பன்னிருபடலம் 143 பன்னிரு புலவரும் பாங்குறப் பகர்ந்த பன்னிரு படலமும் பழிப்பின் றுணர்ந்தோன் ஓங்கிய சிறப்பின் உலகமுழு தாண்ட வாங்குவில் தடக்கை வானவர் மருமான் ஐய னாரிதன் அகலிடத் தவர்க்கு மையறு புறப்பொருள் வழாலின்று விளங்க வெண்பா மாலை யெனப்பெயர் கிறீஇப் பண்புற மொழிந்தனன் பான்மையின் தெரிக்தே." 'அகத்தியனாரிடம் தமிழ் பயின்ற தொல்காப்பியர் முதலிய பன்னிரு புலவர்கள் இயற்றிய தொகுப்பு நூலாகிய பன்னிரு படலம் என்னும் நூலை ன்கு கற்றுத் தெளிந்த ஐயனாரிதனார், புறப்பொருள் பற்றி வெண்பா மாலை' என் லும் பெயரில், இந்த நூலை (புறப்பொருள் வெண்பா மாலையை) இயற்றினார்’-என்பது இந்தச் செய்யுளின் கருத்து. இந்தச் செய்யுளைக் கொண்டு, பன்னிரு படலம் முதல் நூல் எனவும், புறப்பொருள் வெண்பா மாலை அதன் வழிநூல் எனவும் அறியலாம். இதனைத் தொல்காப்பிய உரையாசிரிய ராகிய பேராசிரியரும், "பன்னிரு படலம் முதல் நூலாக வழிநூல் செய்த வெண்பா மாலை ஐயனாரிதனாரும் இது கூறினார்' - எனத் (தொல் - மரபியல்-94) தமது உரையில் அறிவித்துள்ளார். மாறனலங் காரம் என்னும் நூலின் உரையாசிரியரும் (நூற்பா:76 உரை யில்), '... என்பவற்றையும் கூட்டி பன்னிரு படலம் ஆக்கி... திணையும் துறையுமாக விரித்து வெண்பாமாலையாகிய வழி நூலுள் ஐயனாரிதனாரும் கூறியது. உ.ம்...' என இக் கருத்தைத் தெரிவித்துள்ளார். எனவே, ‘தெரிந்ததி லிருந்து தெரியாததற்குச் செல்லுதல்’ என்னும் உளவியல் முறைப்படி, இப்பொழுது நமக்குக் கிடைத்திருக்கிற வழிநூலா கிய புறப்பொருள் வெண்பாமாலையைக் கொண்டு, கிடைக்காத