பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசிரியர் முன்னுரை தொகை நூல் ೧೮ನನಿಹಿ; தமிழ் மொழியில் தொகைநூல் செல்வத்திற்குக் குறைவே யில்லை. வியப்படைய வேண்டா-உண்மையே. அன்று தொட்டு இன்று வரை, தமிழில் ஏறக்குறைய இரண்டாயிரம் தொகை நூல்கள் தோன்றியுள்ளன எனலாம். தொகை நூல் என்பது, பல காலத்தில் - பல பொருள் பற்றிப் பலரால் பாடப்பெற்ற உதிரிப் பாடல்கள் பலவற்றுள் சிறந்தனவற்றைத் தேர்ந்தெடுத்து ஒரு நூல் வடிவில் தொகுக்கப்பட்டிருப்பதாகும். ஒரே புலவர் பல பொருள் பற்றிப் பல பொழுதுகளில் பாடிய பாடல்களின் தொகுப்புகளும் தொகை நூல்களின் வரிசையில் இப்போது இடம்பெற்று வருகின்றன. தொகுப்புக் கலை: இவ்வாறு தொகுப்பது ஓர் அரிய கலையாகும். இதற்கு 'நூல் தொகுப்புக் கலை’ என்னும் அழகிய பெயர் சூட்டலாம். இந்தத் தொகுப்புக் கலை நூல்கள் பலவற்றைப் பற்றிய தாதலின், இந்நூலுக்குத் தமிழ் நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம் என்னும் பெயர் சூட்டப்பட்டது. - உட்பொருள்: இந்நூல், முதல் தொகுதி, இரண்டாம் தொகுதி என இரு தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவற்றுள் முதல் தொகுதி இரு பாகங்களாகப் பகுக்கப்பட்டுள்ளது: தொகுப்புக் கலை வரலாறு, முற்காலத் தொகை நூல்கள் - என்பன அப் பாகங்களாகும். இரண்டாம் தொகுதி நான்கு பாகங்களாகப் பகுக்கப்பட்டுள்ளது. அவை: இடைக்காலத் தொகை நூல் கள், பிற்காலத் தொகை நூல்கள், இருபதாம் நூற்றாண்டுத் தொகை நூல்கள், நான்கு காலத் தொகை நூல்கள்-என்பன. முதல் தொகுதியின் முதல் பாகத்தில், நூல் தொகுப்புக் கலை வரலாறு பற்றியும் - பொதுவாக உலக மொழிகளின்