பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பன்னிருபடலம் 147

பன்னிரு படலத்துள், 'தன்னுறு தொழிலே வேந்துறு தொழிலென்று, அன்ன இருவகைத்தே வெட்சி' என இரண்டு கறுபடக் கூறினாராயினும், முன் வருகின்ற வஞ்சி உழிஞை தும்பை முதலாயின எடுத்துச் செலவு, எயில் காத்தல், போர் செய்தல் என்பன அரசர் மேல் இயன்று வருதலின், வேந்துறு தொழில் ஒழித்துத் தன்னுறு தொழில் எனத் தன் நாட்டும் பிறர் நாட்டும் களவின்கண் ஆன்நிரை கோடலின் இவர் அரசரது ஆணையை நீக்கினாராவர். ஆதலால், அவர் அவ் வாறு கூறல் மிகைபடக் கூறலாம். அதனால், பன்னிரு படலத்துள் வெட்சிப்படலம் தொல்காப்பியர் கூறினார் என் றல் பொருந்தாது” என்னை?

ஒத்த சூத்திரம் உரைப்பின் காண்டிகை மெய்ப்படக் கிளந்த வகைய தாகி ஈரைங் குற்றம்மும் இன்றி நேரிதின் முப்பத் திருவகை உத்தியொடு புணரின் நூலென மொழிப நுணங்குமொழிப் புலவர்.' (தொல்-மரபியல்-100) எனவும், - சிதைவெனப் படும் அவை வசையற நாடின் கூறியது கூறல் மாறுகொளக் கூறல் குன்றக் கூறல் மிகைபடக் கூறல் பொருளில கூறல் மயங்கக் கூறல் கேட்டோர்க் கின்னா யாப்பிற் றாதல் பழித்த மொழியான் இழுக்கக் கூறல் தன்னான் ஒரு பொருள் கருதிக் கூறல் என்ன வகையினும் மனங்கோள் இன்மை அன்ன பிறவும் அவற்றுவிரி வாகும்.' (மரபு-110 ) எனவும் கூறிய ஆசிரியர் தாமே மாறு கொளக் கூறல், குன்றக் கூறல், மிகைபடக் கூறல், பொருளில கூறல், மயங்கக் கூறல் தன்னானொரு பொருள் கருதிக் கூறல் என்னும் குற்றம் பயப் பக் கூறினர்ரென வருமாகலான்.' என்னும் உரைப்பகுதியாலும், அடுத்து, தொல்காப்பியப் புறத்திணை இயலிலுள்ள வெறியறி சிறப்பின் வெவ்வாய்