பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/173

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பன்னிருபடலம் 149 என்பாரும் உளர். மீட்டலைக் கரந்தை என்பார்க்கு அது திணையாயின் குறிஞ்சிக்குப் புறனாகமை யுணர்க...." என்னும் உரைப்பகுதியாலும், புறத்திணையியலிலுள்ள 'எஞ்சா மண்ணசை வேந்தனை வேந்தன் அஞ்சுதகத் தலைச்சென்று அடல்குறித் தன்றே.” என்னும் (7) நாற்பாவின்கீழ் நச்சினார்க்கினியர் எழுதியுள்ள, '. ஒருவன் மண் நசையால் மேற்சென்றால், அவனும் அம் மண்ணழியாமற் காத்தற்கே எதிரே வருதலின், இருவர்க்கும் மண் நசையால் மேற்சேறல் உளதாகலின், அவ்விருவரும் வஞ்சி வேந்தர் ஆவர் என்றுணர்க. எதிர் சேறல் காஞ்சி என்பரால் எனின், காஞ்சியென்பது எப்பொருட்கும் நிலையாமை கூறு தலின் பெரிதும் ஆராய்ச்சிப்படும் பொதுவியற் பொருண்மைப் பெயராற் கூறுதலாகாமை யுணர்க...” என்னும் உரைப் பகுதியாலும், புறத்திணையியலிலுள்ள, "காஞ்சி தானே பெருந்திணைப் புறனே.” என்னும் (22) நூற்பாவின்கீழ் நச்சினார்க்கினியர் எழுதியுள்ள, 1. பெருந்திணைக்குக் காஞ்சி புறனாயிற்று. கைக்கிளை முதலாப் பெருந்திணை யிறுவாய் ஏழனையும் அகம் என்றன் அவ் வகத்திற்கு இது புறனாவதன்றிப் புறப்புறம் என்றல் ஆகாமையுணர்க. இது மேலதற்கும் (பாடாண் பகுதி கைக் இளைப் புறனே. - தொல்-புறம்-25) ஒக்கும்.' என்னும் உரைப்பகுதியாலும், பெயரை வெளிப்படையாகச் சுட்டாமல் குறிப்பாகப் பன்னிரு படலம் தொல்காப்பியத்திற்கு உணர்த்தியிருப்பதை அறியலாம். தொல்காப்பியமும் பன்னிரு படலமும் மாறுபட்டவை என்பதை நச்சினார்க்கினியர் தொல்காப்பிய உரையில் குறிப் பாகக் கூறியிருப்பினும், தாம் எழுதியுள்ள மதுரைக் காஞ்சி உரையின் முற்பகுதியில் பன்னிரு படலத்தின் பெயரைச் சுட்டி வெளிப்படையாக அறிவித்துள்ளார். அப் பகுதி வருமாறு:

மதுரைக் காஞ்சி:இப் பாட்டிற்கு மாங்குடிமருதனார் மதுரைக் காஞ்சி யென்று துறைப் பெயரானன்றித்