பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/175

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பன்னிருபடலம் 151 எனப் பன்னிரு படலத்துள் அறஞ் சார்பாகப் புறப் பொருள் குறித்து வருமென்றது என்னை யெனின், அது மயங்கக் கூற லாம். ஆசிரியர் தொல்காப்பியனார் சார்பாகக் கூறாது வாகைத் திணைக்கண் கட்டில் நீத்த பால் முதலாகக் காமம் நீத்த பால் ஈறாக அறத்தையே விதந்து கூறுதலின்.” என்னும் உரைப் பகுதியாலும், அதே புறத்திணையியலி லுள்ள, வெட்சி வஞ்சி உழிஞை, தும்பை உட்குவரு சிறப்பின் வாகையொடு காஞ்சி பாடாண் திணையும் உளப்படத் தொகைஇ நாடுங் காலை எழுவகைத் ததுவே" என்னும் இரண்டாவது நூற்பாவின்கீழ் அதே ஆசிரியர் எழுதி யுள்ள, - - “...இக் குறிகள் காரணக் குறிகளாம் பூக்களாற் போந்தன வாகலின்; அற்றேல், ஆங்ங்னம் உரைப்பின் அவற்றது வகையால் பாங்குறக்கி ளர்ந்தனர் என்ப அவைதாம் வெட்சி கரந்தை வஞ்சி காஞ்சி உட்குவரு சிறப்பின் உழிஞை நொச்சி முரண்மிகு சிறப்பின் தும்பையுள்ளிட்ட மறனுடை மரபின் ஏழை ஏனனய முகோள் மரபின் வாயுகைம் சிறந்த பாடாண் பாட்டொடு பொதுவியல் என்ப கைக்கிளை ஏனைப் பெருந்திணை என்றாங்கு அத்திணை இரண்டும் அகத்திணைப்புறனே' எனப் பன்னிருபடலத்துப் புறத்திணை பன்னிரெண்டெனக் கூறுபவா லெனின், கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய் முற்படக் கிளங்த எழுதிணை என்ப" (தொல் - அகம்-1) எனக் கூறிய ஆசிரியர். தொல்காப்பியனார்க்குப் பிற்படக் கிளக்கப்படும் புறத்தினை ஏழென்பதே கருத்தாகலானும்,