பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/177

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பன்னிருபடலம் 153 யன வேந்தன் மேல் இயன்று வருதலானும், வேந்துறு தொழிலேயன்றித் தன்னுறு தொழிலுங் கூறின் வேந்தனது ஆணையைக் கடந்து தன்னாட்டும் பிறனாட்டுங்களவு நிகழ்த்தி னாராபவாலானும், அது மரபன்று என மறுக்க.” என்னும் உரைப்பகுதியாலும், தொல்காப்பியர் தம் நாலோடு வேறுபாடுடைய பன்னிரு படலத்தின் வெட்சிப் படலத்தை இயற்றியிருக்கமாட்டார் என இலக்கண விளக்க உரையாசிரியரும் உணர்த்தியுள்ளார் என்பதை அறியலாம். தொல்காப்பியர்: இவ்வாறு ஒரு சிலர் உரைக்கவும், யாப்பருங்கல விருத்தி யுரையாசிரியரும், தொல்காப்பிய உரையாசிரியர்களாகிய பேராசிரியரும், சிவஞான முனிவரும், பிறரும், பன்னிரு படலத்தின் முதற் படலமாகிய வெட்சிப் படலத்தைத் தொல் காப்பியர் இயற்றினார் என்னும் கருத்தை மறுத்தாரிலர்: உடன்பட்டும் உள்ளனர். இவர்தம் உடன் பாட்டுரைகள் முறையே வருமாறு: பத்தாம் நூற்றாண்டில் இயற்றியதாகப் கருதப்படுகின்ற யாப்பருங்கலம் - ஒழிபியலில், மாலை மாற்றே சக்கரம் சுழி குளம் என்று தொடங்கும் நூற்பாவிற்கு (3) எழுதப்பட் டுள்ள விருத்தியுரையில் உள்ள, - "இனி அகப் புறமாவன: காந்தள், வள்ளி, சுரநடை, முது மாலை, தாபதம், தபுதாரம், குற்றிசை, குறுங்கலி, பாசறை முல்லை, இல்லாண் முல்லை என்ற இவை பத்தும், கைக்கிளை, பெருந்திணை என்ற இவை இரண்டும் என்க. ஆய்ந்த அகப்புறம் ஐயிரண்டும் ஆயுங்கால் காந்தள்... .................... அமர்த்தவி ரைந்தும் அகத்தின் புறமே. 'கைக்கிளை என்றா பெருந்திணை என்றாங்கு அத்தினை இரண்டும் அகத்திணைப் புறமே.” இவை பன்னிரு படலம் ......... வெட்சி ஆகவர்தலானும், கரந்தை உட்குவரச் சென்று விடுத்தலானும், வெட்சியும் கரந்தையும் தம்முள் மாறே