பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xvi நூல் தொகுப்புக் கலை பற்றியும் - சிறப்பாகத் தமிழ் மொழி யின் நூல் தொகுப்புக் கலை பற்றியும் விரிவாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இரண்டாம் பாகத்தில், தலைச் சங்க காலத் தொகை நூல்களும் - இடைச்சங்க காலத் தொகை நூல்களும் - கடைச்சங்க காலத் தொகை நூல்களும் ஆராயப் பட்டுள்ளன. இரண்டாம் தொகுதியில், மேலே குறிப்பிட்டுள்ள நான்கு காலங்கள் பற்றிய நான்கு பாகங்கள் இடம் பெற்றுள்ளன. இன்றியமையாத முயற்சி: அடியேன் ஒய்வு நாட்களில் ப்ல ஊர்கட்குச் சென்று - பல நூலகங்கட்குப் போந்து, சிற்சில நாள் தங்கியிருந்து ஆராய்ந்து, ஏறக்குறைய இரண்டாயிரம் தமிழ்த் தொகை நூல்களைப் பற்றிய குறிப்புகளைத் திரட்டியுள்ளேன். யான் சென்று ஆய்வு செய்த சிறந்த நூலகங்களுள், புதுச்சேரியில் உள்ள பிரெஞ்சுஇந்திய ஆராய்ச்சிக்கலைக் கழகத்தின் (INSTITUTFRANCAlS D INDOLOGIE) நூலகமும் ஒன்றாகும். இந்நிறுவனத்தின் நூலகத்தில் யான் ஒரு நாள் ஆய்வு செய்து கொண்டிருந்த போது, இந்த நிறுவனத்தின் தலைவராகவும் பாரிசுப் பல்கலைக் கழகத்தின் பேராசிரியராகவும் பன்மொழி - பல்கலைப்புலவராக ayıh o avså glóþ egyrir išstudcirpšĝsi (International Association of Tamil Research) (psis orirgit goavourirâqib orišîău காலஞ் சென்ற உயர்திரு டாக்டர் ழான் ஃபிலியோசா (Dr.Jean Filliozat) அவர்கள், அந்த நிறுவனத்தைப் பார்வையிடுவதற் காக அன்று வந்த செர்மானியர் ஒருவரை யான் இருந்த இடத்திற்கு அழைத்து வந்தார்கள்; என்னையும் செர்மானி யரையும் ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து வைத்தார் கள் (அந்தச் செர்மானியர் பெயர் நினைவில்லை). பின்னர், அந்தச் செர்மானியர் சமசுகிருதத்திலுள்ள தொகை நூல்களைப் பற்றி ஆராய்ந்து கொண்டிருப்பதாகஎ னக்கு அறிவிக்கப்பட்டது. அவ்வளவு தான்! செர்மானியர் ஒருவர் சமசுகிருதத் தொகை நூல்களைப் பற்றி ஆராய்ந்து பெரிய நூல் வெளியிடப் போகிறார் என்பதை அறிந்ததும் யான் மிகவும் வியப்படைத்