பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/181

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பன்னிருபடலம் 157 ஞான முனிவர் தொல்காப்பியப் பாயிர விருத்தியுரையில் கூறியுள்ள பகுதி வருமாறு: “...அகம் புறம் எனப் பகுத்தவற்றைத் தம்முள் வேறு பாடு நோக்கி அகம் அகப்புறம் புறம் புறப்புறம் என நான்கா கப் பகுத்தலும், வெட்சித் திணை உழிஞைத் திணைகளின் மறுதலை வினையை வீற்று வினையாதலும் வேற்றுப் பூச்சூடு தலும் ஆகிய வேறுபாடுபற்றி வேறு திணையாக வைத்தெண் ணுதலும், இன்னோ ரன்னவை பிறவுமாம். இவை இங்ங்ணம் வேறுபடினும், புணர்ச்சி முடியும் சொல் முடியும் பொருள் முடியும் வேறுபடாமையின் மரபு நிலை திரியாவாயின. இவ் வுண்மை யுணராதார் பன்னிரு படலம் முதலிய நூல்களை வழிஇயின என்றிகழ்ந்து, பன்னிரு படலத்துள் வெட்சிப் படலம் தொல்காப்பியனார் கூறியதன்று. எனவும் தொல்லாசிரியர் வழக் கொடு முரணித் தமக்கு வேண்டியவாறே கூறுப.” பன்னிரு படலத்தின் வெட்சிப் படலத்தைத் தொல்காப்பி யனார் இயற்றவில்லை எனக் கூறுபவர்கள் உண்மையுணராத வர்கள், என்று சிவஞான முனிவர் இகழ்ந்து பேசியிருப்பதை மேலுள்ள பகுதியால் அறியலாம். நடுநிலை நின்று நோக்கின், பன்னிரு படலத்தில் தொல்காப்பியர்க்கும் பங்கு உண்டு என்ற முடிவுக்கு நாமும் வரமுடியும். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, கைக்கிளை, பெருந்திணை என்ற ஏழும் 'அகம் என்று தொல்காப்பியம் கூறுகிறது. இந்த ஏழனுள் கைக்கிளை, பெருந்திணை என்னும் இரண்டும், அகப்புறம் என்று பன்னிரு படலம் கூறுகிறது. இந்தச் சிறு வேறுபாட்டால், பன்னிரு படலத்தில் தொல்காப் பியர்க்குத் தொடர்பில்லை என்று கூறிவிடுவதா? அகத்திணை, புறத்திணை என்னும் இரு திணைகளையும் பற்றிக் கூறுவது தொல்காப்பியம். புறத்திணை ஒன்றைப் பற்றி மட்டும் கூறு வது பன்னிரு படலம். கைக்கிளை ஒருதலைக்காமம் ஆதலா லும், பெருந்தினை பொருந்தாக் காமம் ஆதலாலும், இவை யிரண்டும் உண்மையான - நேர்மையான காமம் ஆகிய குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐந்தைப்போல் சரியான அகம் ஆகா புறநகர் போல, அகத்