பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 - தமிழ் நூல் தொகுப்புக் கலை திற்குச் சிறிது புறம்பே நிறுத்தப்படவேண்டியவையே என் னும் கருத்தில் கைக்கிளையும் பெருந்திணையும் அகப்புறம் ஆகும் எனப் பன்னிரு படலம் கூறியுள்ளது. இந்தக் கருத் தினை நச்சின்ார்க்கினியரும் ஒத்துக் கொண்டுள்ளார்.அதிலும்தொல்காப்பியத்தை அடிப்படையாகக் கொண்டே ஒத்துக் கொண்டுள்ளார் என்பதனை, தொல்காப்பியம் அகத்திணையி யலில் உள்ள, 'மக்கள் நுதலிய அகனைந் திணையும் சுட்டி யொருவர் பெயர்கொளப் பெறாஅர்.’ என்னும் (54 ஆம்) நூற்பாவின்கீழ் அவர் வரைந்துள்ள, “...மக்கள் நுதலிய என்பதனானே, மக்களல்லாத தேவரும் தரகரும் தலைவராகக் கூறப்படார் எனவும், அகனைந்திணை யும் என்றதனானே, கைக்கிளையும் பெருந்தினையும் சுட்டி ஒருவர் பெயர் கொண்டுங் கொள்ளாதும் வருமெனவுங்கொள்க. அகனைந்திணை எனவே, அகமென்பது நடுவுநின்ற ஐந்திணை யாதலின் கைக்கிள்ையும் பெருந்திணையும் அவற்றின் புறத்து கிற்றலின் அகப்புறம் என்று பெயர் பெறுதலும் பெற்றாம்." என்னும் உரைப்பகுதி தெளிவுறுத்துகிறது. எனவே, இவை யிரண்டையும் அகம் என்று கூறும் தொல்காப்பியத்தோடு பன்னிரு படலம் மாறுபட்டதாகத் தெரியவில்லை. இவையிரண் டையும் அகப்புறம்’ என அகத்திணையோடு பன்னிரு படலம் தொடர்புறுத்தியே வைத்துள்ளது. மற்றும் தொல்காப்பியர் ஒருவரே தம் விருப்பம்போல் எழுதிய நூல் தொல்காப்பியம் என்பதும், தொல்காப்பியர் முதலிய பலர் கலந்து ஆராய்ந்து எழுதிய நூல் பன்னிரு படலம் என்பதும் ஈண்டு நினைவிற்கு வரவேண்டும். அடுத்து, குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, கைக்கிளை, பெருந்திணை என்னும் ஏழும் அகம் என்றும் அகத் திணையியலில் கூறி, அகங்கைக்குப் (உள்ளங்கைக்குப்) புறங்கை இருப்பது போல, இந்த அகம் ஏழுக்கும் உரிய புறமாக வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, பாடாண் காஞ்சி என்னும் ஏழையும் புறத்திணையியலில் அழகுப் பொருத்