பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 தமிழ் நூல் தொகுப்புக் கலை உரையில், வேறோரிடத்தில் பேராசிரியரும் நச்சினார்க்கினி யருங்கூட, வேறொரு கோணத்தில், கரந்தையை ஒரு தனித் திணையாக ஒத்துக் கொண்டுள்ளனர். இச் செய்தியை, தொல் தாப்பியம்-செய்யுளியலில் உள்ள, - கைக்கிளை முதலா எழுபெருந் திணையும் முற்கிளங் தனவே முறைநெறி வகையின்.' என்னும் (185 ஆம்) நூற்பாவின் கீழ்ப் பேராசிரியர் வரைந் துள்ள, - ' முறை நெறி வகையின் என்பது அவற்றுக்கு முறை மையாற் புறமெனப்பட்ட வெட்சி முதல், பாடாண் பகுதியீறா கிய எழுபகுதியோடு மென்றவாறு. எனவே, அவற்றுக்குப் பொதுவாகிய முறையாற் கரந்தை புள்ளிட்டுப் பதினைந்து தினையுள் ஒன்று செய்யுட் குறிப்பாகி வரல்வேண்டு மெனவும் முன்னோதியவாறே கொள்ளப்படுமெனவும் சொல்லினா

  • 3

@ãI ITLD ... என்னும் உரைப்பகுதியாலும், அதே நூற்பாவின்கீழ் நச்சி னார்க் கினியர் எழுதியுள்ள, 'எனவே, அகமேழும் புறமேழும் அவ்விரண்டற்கும் பொது வாகிய கரங்தை யொன்றுமாகப் பதினைந்தனுள் ஒன்று செய் யுட்குறுப்பா யல்லது வேறுறுப்பின்று என்றவாறாயிற்று." என்னும் உரைப் பகுதியாலும் அறியலாம். தொல்காப்பியர், வெட்சித் திணைப் பகுதியில் கரந்தை யையும் சேர்த்துக் கூறியிருப்பது போல, உழிஞைத் திணைப் பகுதியில் நொச்சியையும் குறிப்பிட்டுள்ளார் என்னும் உண் மையை, 'குடையும் வாளும் என்று தொடங்கும் புறத்திணை யியல் (13) நூற்பாவால் அறியலாம். இவ்வாறாகத் தொல்காப்பியர், கரந்தையை வெட்சிக்குள் ளும் நொச்சியை உழிஞைக்குள்ளும் அடக்கி, வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, பாடாண், காஞ்சி எனப்புறத் திணை ஏழாகும் என்று கூறிப் போந்தார். பன்னிரு படலமோ இந்த ஏழுடன் கரந்தை நொச்சி என்பவற்றையும் சேர்த்து