பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பன்னிருபடலம் 161 ஒன்பதாக்கி, மேலும் விடுபட்டவற்றைப் பொதுவாகக் தொகுத் துச் சொல்லும் பொதுவியல்' என்னும் ஒரு பகுதியைச் சேர்த் துப் பத்தாக்கி, இதற்கு மேலும் கைக்கிளை பெருந்திணை என்னும் இரண்டையும் அகப்புறம் என்னும் பெயரில் சேர்த்துக் கொண்டு பன்னிரண்டாக்கிப் பன்னிரு படலம்' என்னும் பெயருக்கு உரியதாயிற்று. எனவே, பன்னிரு படலம் தொல் காப்பியத்தோடு மாறுபட்டது எனக்கூறி, அந்நூலிலிருந்து தொல்காப்பியரைக் கழற்றி விட்டு விடுவதற்கில்லை. பிற மறுப்புகள்: இன்னும் ஒரு மறுப்புக்கு நாம் பதில் சொல்ல வேண்டி யிருக்கிறது. ஆநிரையைக் கவரவோ மீட்கவோ வீரர்கள் வேந்தரால் அனுப்பப்பட்டே செல்வார்கள் எனத் தொல்காப்பி யம் வெட்சித் திணைப் பகுதியில் கூறியிருக்கிறதாம். ஆனால், பன்னிரு படலமோ, மறவர்கள் தாமாக வினையாற்றல், வேந்த ரால் ஏவப்பட்டு வினையாற்றல் என்னும் இரு வகையானது வெட்சி எனக் கூறுகிறதாம். இவ்வாறாக இரு நூல்களும் மாறு படுவதால், பன்னிருபடலத்தின் வெட்சிப் படலத்தைத் தொல் காப்பியர் இயற்றியிருக்க முடியாது என்பது அவர்களது மறுப்பு. பழைய உரையாசிரியர்கள் இப்படியொரு வேறுபாடு காட்டி மறுத்திருப்பது மிகவும் சிறு பிள்ளைத்தனமாகும். வேண்டாம் என்ற பெண்டாட்டி கை டட்டாலும் குற்றம்-கால் பட்டாலும் குற்றம்’ என்ற மாதிரி யிருக்கிறது இந்த மறுப்பு. 'தன்னுறு தொழிலே வேந்துறு தொழில்’ என்று அன்ன. இருவகைத்தே வெட்சி என்பது பன்னிரு படலம்.தொல்காப்பி யம் இந்த இருவகையினையும் மறுக்கவில்லை. மறவர்கள் தாமாக ஒன்றும் செய்யக் கூடாது என்று தொல்காப்பியம் எங்கே சொல்லியிருக்கிறது? வேந்துவிடு முனைஞர் வேற்றுப் புலக் களவின் ஆதந்து'ஓம்பல் மேவற்றாகும் (புறம் - 2) என் னும் தொல்காப்பிய நூற்பாவில் உள்ள வேந்து விடு முனை ஞர் என்னும் தொடரை அடிப்படையாகக் கொண்டு, உரையாசிரியர்கள் சிலர், வேந்தன் இட்ட வேலைகளைச் செய் வது மட்டுமே வெட்சி என ஒருதலைச் சார்பாகப் ப்ொருள் கொண்டு விட்டனர். வேந்து விடு முனைஞர்" என்பதற்கு,