பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 தமிழ் நூல் தொகுப்புக் கலை வேந்தனால் இடப்பட்ட வேலைகளை மட்டுமே செய்ய வேண்டிய வீரர்கள் என்பது பொருள் இல்லை; வேந்தனால் அனுப்பப்பட்ட வீரர்கள் என்பதுதான் பொருள்; எல்லாருமே வேந்தனால் அனுப்பப்பட்டே போவார்கள், வேந்தனால் அனுப்பப்பட்டவர்கள் ஒவ்வொரு செயலையும் வேந்தனைக் கேட்டுக் கேட்டுச் செய்து கொண்டிருக்க முடி யாது. 'தன்னுறு தொழில் ஆகச் சூழ்நிலைக்கு ஏற்பச் செய்யக் கூடிய செயல்களும் உண்டு. தொல் காப்பியத்திலும் தன்னுறு தொழில்கள் சொல்லப்பட்டுள்ளன. வெட்சித்திணைப் பகுதியில் தொல்காப்பியர் பல துறைகள் சொல்லியுள்ளார். ஒரு துறை என்பது ஒருவகைச் செயலைக் குறிப்பது. தொல்காப்பியர் வெட்சித் திணையில் கூறியுள்ள முதல் துறையையே எடுத்துக் கொள்வோமே! அது படையியங்கு அரவம்' என்பது. அப்படி என்றால், படை செல்லும்போது உண்டாகும் ஆரவாரம் என்பது பொருள். படை இயங்கும்போது ஏற்படும் லி' அரசனது ஆணையால் உண்டாவதா என்ன? உண்டாட்டு என்பது ஒரு துறை; உண்டு ஆடிமகிழ்தல் என்பது இதன் பொருள். வாடா வள்ளி' என்பது ஒரு துறை, வள்ளிக் கூத்து ஆடுதல் என்பது இதன் பொருள். சீர்சால் வேந்தன் சிறப்பு எடுத்துரைத்தல்' என்பது ஒரு துறை; மன்னனது சிறப்பைப் புகழ்ந்துரைத்தல் என்பது இதன் பொருள். இப்படி இன்னும் சில துறைகள் உள. உண்டாடி மகிழ்தற்கும், வள்ளிக் கூத்து ஆடுவதற்கும், மன்னனைப் புகழ்வதற்கும், இன்ன பிறவற்றிற் கும் மன்னனது கட்டளை வேண்டுமா என்ன? எனவே, இளம்பூரணரும் இலக்கண விளக்க உரை யாசிரியரும் கூறும் இந்த மறுப்பு ஏற்றுக் கொள்ளத்தக்க தன்று. நச்சினார்க்கினியர் இளம்பூரணரின் இந்த மறுப்பை ஏற்றுக் கொள்ளாமல், தொல்காப்பிய வெட்சித்திணையில் தன்னுறு தொழிலும் கூறப்பட்டுள்ளதாக அறிவித்திருப்பது ஈண்டு எண்ணத்தக்கது. ‘உறுபகை வேந்திடை தெரிதல் வேண்டி ஏந்துபுகழ்ப் போந்தை வேம்பே ஆரென வரூஉம் மாபெருந் தானையர் மலைந்த பூ’ (தொல்-புறம்-5) என்னும் துறைக்கு நச்சினார்க்கினியர் கூறியுள்ள உரை விளக்கம் வருமாறு: