பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/187

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பன்னிருபடலம் 163 “மா முதலியனவற்றால் தமக்கு வரும் புகழைத் தாங்கும் மூவேந்தருடைய பெரும் படையாளர். அப் புகழ்தான் உறும் பகையிடத்து இன்ன வேந்தன் படையாளர் வென்றார் என்ப தற்கு ஒர் அறிகுறி வேண்டிப் போந்தை வேம்பு ஆர் என்று கூறிச் சூடின பூவும்-இதன் கருத்து: ஏழகத் தகரும் யானையும் நாயும் கோழியும் பூழும் வட்டும் வல்லும் சொல்லும் முதலிய வற்றால், தமக்கு வரும் வெற்றிப்புகழைத் தாம் எய்து தற்குத் தத்தம் வேந்தர் அறியாமல் படைத் தலைவர் தம்முள் மாறாய் வென்று ஆடுங்கால், இன்ன அரசன் படையாளர் வென்றார் என்றற்கு அவரவர் பூச்சூடி ஆடுவர் என்பது உம், அக் கூத்தும் வேத்தியற் கூத்தின் வழிஇயின கருங்கூத்து என்பது உம், அது தன்னிறு தொழில் என்பது உம் உணர்த்தியதாம். இதனை இங்ங்ணம் தன்னுறு தொழில் ஆக்கமால் வேந்துறு தொழிலாக் கின் அது தும்பையாம். புகழ்ந்து கூறிற்றெனின் பாடாண் திணையாம். ஆசிரியர் வெறிக்கூத்திற்கும் வள்ளிக்கூத்திற்கும் இடையே இதனை வைத்தது இக் கருத்தானே என்றுணர்க . உதாரணம்:- ஏழக மேற்கொண்டு. போந்தையங் கண் ணி புனைந்து-இது போந்தை மலைந்தாடியது. குறுபூழ்ப் போர் ... வேம்பு தலைமலையற் பாலதூஉ மன்று' - இது வேம்பு தலை மலைந்தாடியது. ஆர்வேய்ந்த... போர் செய்து’-இஃது ஆர். மலைந்தாடியது. இவை தன்னுறு தொழிலாயவாறு காண்க.' நச்சினார்க்கினியரின் இந்த உரைப்பகுதியைக் கொண்டு, தொல்காப்பிய வெட்சித்திணைப் பகுதியிலும் தன்னுறு தொழில், வேந்துறு தொழில் என்னும் இரண்டும் கூறப்பட் டுள்ளமையை அறியலாம். எனவே, இளம்பூரணர் முதலியோர் இந்தப் பூச்சாண்டியைக் காட்டிப் பன்னிரு படலத்தின் வெட்சிப் படலத்தைத் தொல்காப்பியர் இயற்றவில்லை எனக் கூறல் பொருந்தாது. மற்றும் ஒரு மறுப்பு கூறப்படுகிறது. அஃதாவது,- நிலை யாமையைப் பற்றிப் பேசுவது காஞ்சித்திணை என்று தொல் காப்பியம் கூறுகிறது. தன் நாட்டைப் பிடிக்க வந்தவனை எதிர்த்துப் போரிடுதல் காஞ்சித்திணை எனப் பன்னிரு படலம் கூறுகிறது. எனவே தொல்காப்பியத்தோடு வேறுபட்ட பன்னிரு