பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/193

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பன்னிருபடலம் 169 நிற்க, கிடைக்கப் பெறாத பன்னிரு படலத்தில் வெட்சி முதலிய பன்னிரு படலங்களும் உள்ளன என்பதற்கு ஏறக் குறையச் சான்றுகள் கிடைத்துள்ளன.பாயிரம், வெட்சித்திணை, காஞ்சித்திணை, உழிஞைத்தினை, நொச்சித்திணை, தும்பைத் திணை, வாகைத் திணை, பொதுவியல் திணை, கைக் கிளைத் திணை, பெருந்திணை ஆகியவை தொடர்பான பன்னிரு பட்ல நூற்பாக்கள் சிலவற்றை, மேலே நாம் எடுத்துக் காட்டியுள்ள யாப்பருங்கல விருத்தியுரை, தொல்காப்பிய - இளம்பூரணர் உரை, தொல்காப்பிய - பேராசிரியர் உரை, மதுரைக் காஞ்சி - நச்சினார்க்கினியர் உரை ஆகியவற் றின் வாயிலாக அறிந்துள்ளோம். மேலே அறிந்தனவேயன்றி இன்னும் சில நூற்பாக்கள் சீவகசிந்தாமணி-நச்சினார்க்கினியர் உரையாலும், தொல்காப்பிய உரைகளாலும் யாப்பருங்கல உரையாலும் அறிவிக்கப்பட்டுள்ளன. அவை வருமாறு:-சீவக சிந்தாமணி-கோவிந்தையார் இலம்பகத்தில் கொடுமர எயினர் என்று தொடங்கும் (20 ஆம்) பாடலுக்கு நச்சினார்க்கினியர் எழுதியுள்ள உரைப் பகுதியிலிருந்து, பன்னிரு படலத்தின் கரந்தைத் திணையைச் சேர்ந்த, பல்லாக் கொண்டார் ஒல்லார் என்னும் பூசல் கேட்டுக் கையது மாற்றி...” என்னும் நூற்பா கிடைக்கப் பெற்றுள்ளது. மற்றும், தொல்காப் பியம் புறத்திணை இயலில் உள்ள 'அறுவகைப்பட்ட பார்ப் பனப்-பக்கமும்’ என்று தொடங்கும் வாகைத்திணை பற்றிய (16 ஆம்) நூற்பாவிற்கு, இளம்பூரணர் எழுதியுள்ள உரை யிடையே காணப்படுகின்ற, "பன்னிரு படலத்துள், பணியும் வெயிலும் கூதிரும் யாவும் துணியில் கொள்கையொடு நோன்மை எய்திய தணிவுற்று அறிந்த கணிவன் முல்லை’ எனவும் ஒதுதலின் மேலதே பொருளாகக் கொள்க.” என்னும் பகுதியிலிருந்து, பன்னிருபடல வாகைத்திணை பற்றிய நூற்பா ஒன்று அறியவருகிறது. அடுத்து யாப்பருங்