பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/196

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


172 தமிழ் நூல் தொகுப்புக் கலை கைக் கிளைப் படலமாகத்தான் இருக்கக்கூடும். கைக்கிளைச் செய்யுளைப் பற்றிக் கூறும் தொல்காப்பிய நூற்பாவிற்கு உரையெழுதும் பேராசிரியர், இந்த இடத்திலே பன்னிரு பட வம் எனப் பொதுவாக நூற்பெயரைச் சுட்டுவதனினும், கைக் கிளைப் படலம் என இடத்திற்கு ஏற்பச் சிறப்பாகத் திணைப் பெயரைச் கட்டிக் கூறுவதே பொருத்தமாகும். பன்னிரு பட லக் கைக்கிளைப் படலம் என்று இரண்டையும் இணைத்துக் கூறியிருக்கலாம் எனின், அது மிகவும் நீளமாய் இருக்கு மாதலின் அங்ங்ணம் கூறாதுவிட்டார். அன்றியும், பன்னிரு படலத்தில் உள்ள ஒவ்வொரு படலமும் தகுதிமிக்க ஒவ்வோர் ஆசிரியர்ால் இயற்றப்பட்டதாதலின், ஒவ்வொன்றும் தனிநூல் போன்ற சிறப்புடையது; அதனால், திணைப் பெயரால் பட லத்தைச் சுட்டினாலேயே பன்னிரு படலத்தைக் குறிக்கக் கூடிய நிலைமை அந்தக் காலத்தில் இருந்திருக்கும்; எனவே தான் பேராசிரியர் முழு நூல் பெயரைச் சுட்டாமல் திணைப் பெயரைக் குறிப்பிட்டதோடு அமைந்துவிட்டார். மற்றும், ஒரு நூலின் ஒரு பிரிவில் உள்ள ஒரு செய்தியைக் கூறவந்தவிடத்து, நூல் பெயரைக் கூறாமல், செய்தி அமைத் துள்ள பிரிவின் பெயரை மட்டும் குறிப்பிடுவது என்றுமே உலக வழக்காகும். எடுத்துக் காட்டாக, தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் உள்ள ஒரு செய்தியைக் கூறுங்கால், தொல்காப்பியத்தைக் குறிப்பிடாமல் பொருளதிகாரம் என்று மட்டும் கூறுவதையும், கலித்தொகையில் உள்ள குறிஞ்சிக் கலி யிலிருந்து ஒரு செய்தியைச் சொல்லுங்கால் கலித்தொகை என்னும் நூற்பெயரைக் குறிப்பிடாமல் குறிஞ்சிக்கலி எனப் பிரிவின் பெயரைமட்டும் கூறுவதையும், கம்பராமாயணம் - அயோத்தியா காண்டத்திலுள்ள ஒரு கருத்தைச் சொல்ல நேர்ந்தபோது கம்பராமாயணம் என்னும் நூற்பெயரைச் சுட் டாமலேயே அயோத்தியா காண்டம் எனக் காண்டத்தின் பெயரை மட்டுமே குறிப்பிடுவதையும், இன்ன பிற மாதிரிகளை யும் உலக வழக்கில் காணலாம். இவ்வாறே, பேராசிரியர் நூற் பெயரைக் குறிப்பிடாமல், கைக்கிளைப் படலம் எனப் பிரிவின் பெயரை மட்டும் குறுப்பிட்டிருப்பினும், அது பன்னிரு படலத் தின் கைக்கிளைப் படலத்தையே குறிக்கும்.