பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பன்னிருபடலம் 173 இந்தக் கருத்தை உறுதிசெய்ய இன்னும் ஒரு சான்று உண்டு: தெரிந்ததிலிருந்து தெரியாததற்குச் செல்லுதல்’ என் னும் உளவியல் முறைப்படி, யாப்பருங்கல விருத்தியுரையி லிருந்து தொல்காப்பியப் பேராசிரியர் உரைக்கு வருவோம். “அகத்திணை மருங்கின் அளவு மயங்கி என்று தொடங்கும் நூற்பா, பன்னிரு படலத்துட் பெருந்திணைப் படலத்துச் சூத்திரம்’ என யாப்பருங்கல விருத்தியுரை கூறியிருப்பதை மேலே எடுத்துக் காட்டியுள்ளோம்.நூற்பெயர், பிரிவின் பெயர் ஆகிய இரண்டையும் இணைத்துப் பன்னிரு படலத்துட் பெருந்திணைப் படலத்துச் சூத்திரம் எனத் தெளிவாக யாப்ப ருங்கல உரை கூறியுள்ளது. அது குறிப்பிட்டுள்ள குத்திரம் பாட்டின் யாப்பு வகையைப் பற்றியதாகும். இந்த அடிப்படை யுடன் பேராசிரியரிடம் வருவோம். பேராசிரியர் குறிப்பிட் டுள்ள கைக்கிளைப் படலத்துச் சூத்திரங்களும் பாட்டின் யாப்பு வகையைப் பற்றியனவேயாகும். இதைக் கொண்டு, கைக்கிளைத் திணை இன்ன வகையான பாடலால் இயற்றப்படும்; பெரு ந் திணை இன்னவிதமான பாடலால் இயற்றப்படும்-எனப்பன்னிரு படலத்துள் சொல்லப்பட்டுள்ளமையை அறியலாம். இவ்விரண்ட னுள்,பெருந்திணைப் பாடலின் யாப்பு வகையைப் பற்றிக் கூறும் குத்திரம் பன்னிரு படலத்துட் பெருந்திணைப் படலத்துச் சூத் திரம்’ என யாப்பருங்கல உரை கூறுவதைக் கொண்டு, கைக் கிளைப் பாடலின் யாப்பு வகையைப் பற்றிக் கூறுவனவாகப் பேராசிரியரால் குறிப்பிடப்பட்டுள்ள மூன்று சூத்திரங்களும், பன் னிருபடலத்துக் கைக்கிளைப் படலச் சூத்திரங்களாகும் என நம்பலாம். இவ்வாறாக, பன்னிரு படல நூலின் பன்னிரு படலங்களை யும் பற்றிய நூற்பாக்கள் சிலவாயினும் நமக்குக் கிடைத்திருப் பது ஒர் அறிய வாய்ப்பாகும். இங்கே, கைக்கிளைப் படலத்து நூற்பாக்களைப் பற்றி இவ்வளவு விதந்து எழுத நேர்ந்ததற்கு இன்றியமையாத ஒரு காரணம் உண்டு. அஃது அடுத்தாற் போல் அறியப் பெறும். ஆசிரியர்கள்: பன்னிரு படலத்தில் ஆசிரியர்கள் தொல்காப்பியர் முதலிய