பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பன்னிருபடலம் 175 என்னும் இரண்டடிகளில் உள்ள உணர்ந்தோர்: என்னும் பன்மைச் சொல்லையும், 'தொல்காப்பியனும்’ என்னும் ஒருமைச் சொல்லையும் ஊன்றி நோக்கவேண்டும். அகத்தி யனது முதல்நூலை உணர்ந்தோர் பலர்; அவராவார் தொல் காப்பியனும் அந்தப் புலவனும் இந்தப் புலவனுமாகப் பன்னிரு வர்-என்பதாகத் தொல்காப்பியனிலிருந்து பட்டியல் தொடங் குகிறது. என்பதை இச் செய்யுள் அமைப்பு அறிவிக்கின்ற தல்லவா? எனவே, உணர்ந்தோர்' என்னும் பன்மையும் 'தொல்காப்பியன்' என்னும் ஒருமையும், தொல்காப்பியனும்' என்னும் சொல்லின் இறுதியில் உள்ள எண்ணும்மையும், "அகத்தி யரது முதல் நூலைக் கற்றவர்களாகிய தொல்காப்பியனும் பிறருமாகச் சேர்ந்து பன்னிரு படலம் இயற்றினார்' என்னும் கருத்தை நாம் உய்த்துணரும்படிச் செய்கின்றன. இந்தச் செய்யுள் முழுதும் பேராசிரியரால் தரப்பட்டிருப் பின், பன்னிருவர் என்ற எண்ணிக்கையும், பன்னிருவர் பெயரும் கிடைத்திருக்கலாம். இந்த வாய்ப்பு இன்மையால், இதன் வழி நூலாகிய புறப்பொருள் வெண்பா மாலையின் சிறப்புப் டாயிரச் செய்யுளில் உள்ள, தொல்காப்பியன் முதல் பன்னிரு புலவரும் பாங்கு றப் பகர்ந்த பன்னிரு படலம்’ என்னும் பகுதி யால்தான் பன்னிருவர் என்னும் எண்ணிக்கை நமக்குத் தெரிய வந்துள்ளது. எனவே,-இந்த இரு நூல்களின் பாயிரச் செய்யுள் களும் இணைந்து, பன்னிரு படல ஆசிரியர்கள் தொல்காப்பி யன் முதலிய பன்னிருவர்' என்னும் செய்தியை மட்டும் தெரி வித்துள்ளன. இனி, இந்தப் பன்னிருவர் யார் யாராக இருக்க லாம் என்று பார்ப்போமே! அகத்தியனாரின் மாணாக்கர் களைத் தெரிவிக்கத் தொடங் கிய அபிதான சிந்தாமணி ஆசிரியர், இவர்தம் மாணாக்கர் கள் தொல்காப்பிய முனிவர், அதங்கோட்டாசான், துராலிங் கன், செம்பூட்சேய், வையாபிகன், வாய்ப்பியன், பனம்பாரன், கழாரம்பன், அவிநயன், காக்கை பாடினியன், நற்றத்தன் வாமனன் முதலியவர்கள்', என்று கூறியுள்ளார்; அஃதாவது, - குறிப்பிட்ட பன்னிருவரைப் பெயர் சூட்டிச் சிறப்பாகவும் மற்றையோரை முதலியவர்கள்' என்பதில் அடக்கிப் பொது