பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/200

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


176 தமிழ் நூல் தொகுப்புக் கலை வாகவும் கூறியுள்ளார். இவ்வாறே இன்னும் சிலர் அகத்தியரின் மாணாக்கர்களைக் குறிப்பிட்டுள்ளனர். முதலியவர்கள்’ என் னும் சொல்லைக் கொண்டு, இந்தப் பன்னிருவர் அல்லாத பிறரும் உளர் எனத் தெளியலாம். எனவே, பன்னிரு படலத் தின் ஆசிரியர்கள் இந்தப் பன்னிருவராகவும் இருக்கலாம் - அல்லது - இந்தப் பன்னிருவருள் சிலரும், வேறு சிலருமாகச் சேர்ந்த பன்னிருவராகவும் இருக்கலாமன்றோ? பன்னிரு படலத்தின் ஆசிரியர்கள் பன்னிருவருள் பதின்மர் பெயர்கள் தெரியாவிடினும், தொல்காப்பியருடன் மற்றொரு வர் பெயரை மட்டும் தெரிந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைத் துள்ளது. தொல்காப்பியச் செய்யுளியல் உரையில் (பன்னிரு படலத்தின்) கைக்கிளைப் படலத்துச் சூத்திரங்களாகப் பேரா சிரியரால் எடுத்துக் காட்டப்பட்டுள்ள மூன்று சூத்திரங்களுள், "ஆச்சீர் எருத்திற் றாகிமுட் டின்றி எச்சீ ரானும் ஏகாரத் திறுமே.” என்பதும் ஒன்று என முன்னரே அறிந்து வைத்துள்ளோம். இந்தச் சூத்திரம் எந்தப் பாவைப் பற்றியது என அறிவிக்க வில்லையாதலின், இதனை முழுமைபெற்ற சூத்திரமாகக் கருத முடியாது. இதுபோன்ற ஒரு சூத்திரம் முழுமை பெற்ற நிலை யில் சிறு பாட வேறுபாட்டுடன் யாப்பருங்கல விருத்தியுரை யில் மேற்கோளாக எடுத்தாளப்பட்டுள்ளது. இந்த முழு உரு வத்தை, யாப்பருங்கலம் - செய்யுளியலில் உள்ள, அந்த அடியின் அயலடி சிந்தடி வந்தன கேரிசை ஆசிரி யம்மே." என்னும் நூற்பாவின் கீழ் எழுதப்பட்டுள்ள, “...சிந்து வந்தன என்னாது, பெயர்த்தும் அடி என்றது என்னை? கைக்கிளைப் பொருள்மேல் ஆசிரியம் வருவுழி எருத் தடி முச்சீரான் வரப்பெறாது” என்பர் கடிய கன்னியார் என் பது அறிவித்ததற்கு எனக் கொள்க, என்னை? 'கைக்கிளை ஆசிரியம் வருவ தாயின் முச்சீர் எருத்தின் றாகி முடிவடி எச்சீ ரானும் ஏகாரத் திறுமே.” என்றாராகலின்.”