பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பன்னிருபடலம் 177 என்னும் உரைப் பகுதியில் காணலாம். (பன்னிரு படலத் தின்) கைக்கிளைப் படலத்துச் சூத்திரமாகப் பேராசிரியரால் தொல்காப்பிய உரையில் எடுத்துக் காட்டப்பெற்றுள்ள இந் தச் சூத்திரம், கடிய நன்னியார் என்னும் புலவரால் இயற்றப் பட்டதென யாப்பருங்கல விருந்தியுரை கூறுதலின், பன்னிரு படலத்தின் கைக்கிளைப் படலத்தைக் கடிய நன்னியார் இயற்றி யிருக்கலாம் எனக்கொள்ளலாமே! இதனை உறுதி செய்யும் வகையில் யாப்பருங்கல விருத்தியுரையில் இன்னும் ஒர் இடம் உள்ளது; யாப்பருங்கலம்-செய்யுளியலில் உள்ள, வெண்பா ஆசிரியம் கலியே வஞ்சியெனப் பண்பாய்க் துரைத்த பாகான் காகும்’ என்னும் நூற்பாவின் கீழ் வரையப்பட்டுள்ள உரையின் ஒரு பகுதி கருதத் தக்கது. அது வருமாறு: "கைக்கிளையும் வெண்பா முதலாய் ஆசிரியம் ஈறாய் வரும்வழி, ஆசிரிய அடி இரண்டேயாய், அவற்றுள் ஈற்றடி நாற்சீராய், ஈற்றயலடி முச்சீராய் வருவது எனக் கொள்க. என்னை? 'இருதலைக் காமம் இன்றிக் கைக்கிளை ஒருதலைக் காம மாகக் கூறிய இலக்கண மரபின் இயல்புற நாட்டி அதர்ப்பட மொழிந்தனர் புலவர் அதுவே ப்ெறுதி வெண்பா உரித்தாய் மற்றதன் இறுதி எழுசீர் ஆசிரி யம்மே." "வெண்பா ஆசிரி யத்தாய் மற்றதன் இறுதி எழுச்சீர் ஆசிரி யம்மே." "கைக்கிளை மருட்பா வாகி வருகால் ஆசிரியம் வருவ தாயின் மேவா முச்சீர் எருத்திற் றாகி முடிவடி எச்சீ ரானும் ஏகாரத் திறுமே.” என்பது கடிய நன்னியார் செய்த கைக்கிளைச் சூத்திரம் ஆத வின்,'- - இந்த உரைப் பகுதியில் கடிய தன்னியாரின் மூன்று சூத்தி ரங்கள், கைக்கிளைச் சூத்திரம்' என்னும் பெயரில் தரப்பட்