பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 - தமிழ் நூல் தொகுப்புக் கலை டுள்ளமை காண்க. மேலுள்ள மூன்றாவது சூத்திரத்தின் பிற் பகுதியாகப் பேராசிரியர் காட்டியுள்ள சூத்திரத்தைக்கொள்ள இடமுண்டு. இந்த உரைப் பகுதியில் கூறப்பட்டுள்ள, 'கடிய நன்னியார் செய்த கைக்கிளைச் சூத்திரம்' என்பது பன்னிரு படலத்தின் கைக்கிளைப் படலமாக இருக்கலாம். எனவே, அகத்தியரின் மாணாக்கர்களுள் கடிய நன்னியாரும் ஒருவராக இருக்கலாமன்றோ? இந்தக் கருத்தினை முற்றமுடிந்த முடி பாக உறுதிப் படுத்தா விடினும், அறிஞர்களின் ஆராய்ச்சிப் பசிக்கு விருந்தாக இதனை விட்டுவைப்போமாக! இதுகாறுங் கூறியவற்றால், நக்கீரர் முதலிய பலரால் பாடப்பட்ட பத்துப் பாட்டு' என்னும் தொகுப்பைப்போல், பன்னிரு படலம் என்னும் நூல், தொல்காப்பியர் முதலிய புல வர்கள் பன்னிருவர் இயற்றிய பன்னிரண்டு படலங்களின் தொகுப்பு நூல் என்பது பெறப்படும். இதனை நாம், இடைச் சங்க கால இலக்கணத் தொகை நூல் என்று கொள்ளலாம். ஊமைக்கு உளறு வாயன்: தலைச்சங்கத் தொகை நூல்கள் நான்கினைப் பற்றியும் இடைச் சங்கத் தொகை நூல்கள் நான்கினைப் பற்றியும் இறை யனார் அகப்பொருள் உரையின் வாயிலாக முன்னமேயே அறிந்து வைத்துள்ளோம். அந்த எட்டு நூல்களின் பெயர் தவிர வேறொன்றும் அறிய முடியவில்லை. ஆனால், இடைச் சங்கத் தொகை நூலாகிய பன்னிரு படலத்தைப் பற்றி ஒரளவாயி னும் அறிய முடிகிறது; பன்னிரு படல நூற்பாக்கள் ஒருசில வாயினும் கிடைத்துள்ளன. இந்த நிலையில், அந்த எட்டு நூல்களினும் பன்னிரு படலம் எவ்வளவோ வாய்ப்புடையது என்று சொல்லலாம். ஊமையனுக்கு உளறுவாயன் சண்டப் பிரசண்டன்' என்பது பழமொழியாயிற்றே!