பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/204

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


180 தமிழ் நூல் தொகுப்புக் கலை ஆராய்தல், தைவரல், செலவு, விளையாட்டு, கையூழ், குறும் போக்கு என்னும் எட்டு வகையான ஆய்வுகள் (சோதனைகள்) செய்து பண் எழுப்பிப் பார்த்து, யாழில் பண் வகையில் குற்றம் ஒன்றும் இல்லை எனத் தெளிந்தாள். பின்னர்த் தன் மெல்லிய விரல்களால் யாழ் நரம்பைத் தடவி, வார்தல், வடித்தல், உந் தல், உறழ்தல், உருட்டல், தெருட்டல், அள்ளல், பட்டடை என்னும் எட்டுவகை இசை யொலிச் செயலால் (இசைக் கர ணத்தால்) ஆய்வுசெய்து ஒலியெழுப்பிக் காதால் கேட்டுப் பார்த்து குறைபாடு இன்றி எல்லாம் ஒழுங்காய் இருப்பதைக் கண்டுகொண்டு யாழைக் கோவலன் கையில் தந்தாள்-என் பது மேலுள்ள பகுதியின் கருத்தாகும். ஈண்டு, வார்தல் முதலிய எட்டுவகை இசைக் கரணங்களுக்கு அரும்பதவுரையாசிரி யர் கூறியுள்ள பொருள் விளக்கம் வருமாறு: 'வார்தல் - சுட்டுவிரற் செய்தொழில், வடித்தல்-சுட்டு விரலும் பெருவிரலுங் கூட்டி நரம்பை அகமும் புறமும் ஆராய் தல், உந்தல்-நரம்புகளை உந்தி வலிவிற் பட்டதும் மெலிவிற் பட்டதும் நிரல் பட்டதும் நிரலிழிபட்டதும் என்றறிதல், உறழ் தல்-ஒன்றிடை யிட்டும் இரண்டிடையிட்டும் ஆராய்தல், உருட் டல் - இடக்கைச் சுட்டுவிரல்தானே யுருட்டலும், வலக்கைச் சுட்டுவிரல் தானே யுருட்டலும், சுட்டொடு பெருவிரற் சுட்டி யுருட்டலும், இருபெரு விரலும் இயைந்துடன் உருட்டலும் என வரும். தெருட்டல் என்பது செப்புங் காலை உருட்டி வருவ தொன்றே மற்றவ் ஒன்றன் பாட்டுமடை யொன்ற நோக்கின் வல்லோர் ஆய்ந்த நூலே யாயினும் வல்லோர் பயிற்றுங் கட்டுரை யாயினும் பாட்டொழிக் துலகினில் ஒழிந்த செய்கையும் வேட்டது கொண்டு விதியுற காடி’ என வரும்.....இவை இசைத்தமிழ்ப்பதினாறு படலத்துட்கரண வோத்துட் காண்க." இந்த உரைப்பகுதியின் வாயிலாக, சிலப்பதிகார அரும்பத வுரையாசிரியர் பதினாறு படலம்' என்னும் இசைத் தமிழ்