பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/206

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


182 தமிழ்நூல் தொகுப்புக் கலை செய்யுளியல்-165-உரை) என இளம்பூரணர் கூறியிருப்பது (இது முன்னரே எடுத்துக் காட்டப் பெற்றுள்ளது) ஈண்டு ஒப்பு நோக்க வேண்டியதாகும். எனவே, இளம்பூரணரின் கருத்துப் படி, பன்னிரு படலம் என்னும் நூலில் உள்ள ஒவ்வொரு பட லத்தையும் ஒத்து' என்னும் பெயரால் குறிப்பிட முடிவது போலவே, பதினாறு படலம் என்னும் நூலில் உள்ள ஒவ்வொரு படலத்தையுங்கூட ஒத்து' என்னும் பெயரால் குறிப்பிட முடி யும் என்பது தெளிவு. - தொகை நூல் பதினாறு படலம் என்னும் நூல் ப்தினாறு சிறு பிரிவுகள் மட்டும் உடையது என்றோ-அல்லது - பதினாறு பெரும் பிரிவு களும் அவற்றுள் பல உட்பிரிவுகளும் உடையது என்றோ - எவ் வாறு கூறப்படினும் கவலையில்லை; ஆனால், இந்த நூலில் பல்வேறு வகைப்பட்ட பதினாறு படலங்கள் உள்ளன என்பது வெளிப்படை அங்ங்னமெனில் பலரால் செய்யப் பெற்ற பிடலங் களின் தொகுப்பாகிய ஒரு பன்னிரு படலம் என்னும் தொகை நூலைப்போலவே, பதினாறு படலம் என்னும் நூலும் பல ரால் செய்யப் பெற்ற படலங்களின் தொகுப்பாகிய தொகை நூலாக இருக்கலாம் அன்றோ? பன்னிரு படலம் பன்னிருவ ரால் செய்யப்பட்டிருப்பது போல, பதினாறு படலம் பதினறு வரால் (பதினாறு பேரால்) செய்யப்பட்டிருக்கலாமே! பன்னிரு படலம் பன்னிருவரால் செய்யப் பெறாமல் ஒருவ ரால் செய்யப் பெற்றிருப்பின், பன்னிரு படலம் எனப் பெயர் பெறாமல் புறத்திணைப் படலம் என்றோ அல்லது ஆசிரியர் பெயராலோ வழங்கப் பெற்றிருக்கும். அதேபோல், பதினாறு படலம் என்னும் நூலும் பலரால் இன்றி ஒரே ஆசிரியரால் செய்யப் பெற்றிருப்பின், பதினாறு படலம் எனப் பெயர் வழங்கப் பெறாமல், இசைத்துறைப் பெயராலோ அல்லது ஆசிரியர் பெயராலோ வழங்கப் பெற்றிருக்கும். அங்ஙனம் இன்றிப் பலரால் செய்யப்பட்ட தொகுப்பாய் இருந்தமையால்தான், பலரால் பாடப்பட்ட பத்துப்பாட்டு' என்னும் தொகுப்புப் போல, பதினாறு படலம் என வழங்கப்