பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/209

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பதினாறுபடலம் 185 7. கையூழ் என்பது கருதுங் காலை எவ்விடத் தானு மின்பமுஞ் சுவையும் செவ்விதிற் றோன்றிச் சிலைத்துவர லின்றி நடை நிலை திரியாது கண்ணத் தோன்றி நாற்பத் தொன்பது வனப்பும் வண்ணமும் பாற்படத் தோன்றும் பகுதித் தாகும்.' 8. துள்ளற் கண்ணுங் குடக்குத் துள்ளும் தள்ளா தாகிய வுடனிலைப் புணர்ச்சி கொள்வன வெல்லாங் குறும்போக்கு ஆகும். இந்த எட்டு நூற்பாக்களையும் நூற்பெயர் குறிப்பிடா மல் அரும்பத வுரையாசிரியர் எடுத்துக் காட்டியுள்ளார்; எட்டாவது நூற்பாவின் இறுதியில், இவையெல்லாம் ஈண்டு விரித்துரைப்பிற் பெருகும்’-என்று எழுதி புள்ளார்; இதற்குப் பின்னால், வார்தல் வடித்தல் முதலிய எண்வகை இசைக் கரணங்கட்கு விளக்கம் சொல்லத் தொடங்கி, தெருட்டல், என்பதை விளக்குகிற பதினாறு படலத்து நூற்பாவினை எடுத்துக்காட்டி, 'இவை இசைத்தமிழ்ப் பதினாறு படலத்துட் கரணவோத்துட் காண்க'-என்று கூறி முடித்துள்ளார். இந்த முன்-பின் சூழ்நிலையை வைத்துக் கணித்துப் பார்க்குங்கால், நூற்பெயர் குறிப்பிடாமல் அரும்பத வுரையாசிரியரால் எடுத்துக் காட்டப்பெற்றுள்ள.மேலுள்ள எட்டு நூற்பாக்களும் பதினாறு படலத்துள் ஒரு படலத்தை, அல்லது ஒரு படல ஒத்தைச் சேர்ந்தவையாகவே இருக்கும் எனக் கருதலாம். இசைத் தமிழ் இலக்கணத்தை இவ்வளவு விளக்கமாகச் சொல்லும் பதினாறு படலம் நமக்குக் கிடைக்காமற் போனது தீப் பேறே. இவ்வாறாக, பன்னிரு படலமும் பதினாறு படலமும் போல, இன்னும் எந்தெந்தத் துறைகளையோ சேர்ந்த எத்தனையோ தொகை நூல்கள் இடைச்சங்க காலத்திலும், அதனையொட்டிய காலத்திலும் இருந்திருக்கக் கூடும்.