பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புகுவாயில் கலைக்களஞ்சிய வரலாறு பல்வேறு கடைகள்: சம்பளம் வாங்கி வந்ததும், வீட்டிற்கு வேண்டிய பல பொருள்களை வாங்கி வரும்படி மனைவி கணவனிடம் கூறி னாள். அரிசிக் கடைக்குப் போய் அரிசியும், காய்கறிக் கடைக் குப்போய் காய்கறியும், துணிக்கடைக்குச் சென்று துணிகளும், மளிகைக் கடைக்குச் சென்று உப்பு-மிளகாய்-புளி-கடுகு-சீரகம்வெந்தயம் - மிளகு மல்லி - பூண்டு - சர்க்கரை நெய்-பருப்பு வகைகள் - முதலியனவும் - ஆடம்பரக் கடைக்குப் போய் சோப்பு - சீப்பு - கண்ணாடி - நறுமணப் பொருள் - சிறார் விளையாட்டுப் பொருள்கள்-விளக்கு தொடர்பான பொருள் கள் - குழந்தைகட்குத் தின்பண்ட வகைகள்'- முதலியனவும், மருந்துக் கடைக்குச் சென்று மருந்து வகைகளும், இவ்விதமாக இன்னும் பல்வேறு கடைகளுக்குச் சென்று பல்வேறு பொருள் களும் வாங்கி வரவேண்டும். இந்தப் பொருள்களை ஒரே வேளையில் வாங்க முடியா விடினும் மறுநாளிலும் வாங்கலாம். ஒரு கடைக்கு ஒரு கடை எட்டி எட்டி உள்ளன. ஒவ்வொரு கடையாக-ஒவ்வொரு பொருளாகத் தேடிச் சென்று வாங்குவதில், மிக்க நேரமும் செலவழிக்கப்படுகிறது-கால்களும் ஒடிகின்றன. சென்றவர் சோர்ந்து வீட்டிற்கு வருகிறார். அமுத சுரபி: இவருடைய நண்பர் ஒருவர் வல்லவர்-கெட்டிக்காரர். அவர், பல கடைகளுக்குச் சுற்றி அல்ைந்து திரிந்து சென்று வாங்காமல், பல கடைகளில் வாங்க வேண்டிய பல்வகைப் பொருள்களை ஒரே ஒரு பெரிய கடையில் வாங்கிவிடுகிறார். அந்தக் கடை 'அமுத சுரபி' என்னும் பெயருடைய பெரிய கடையாகும். இந்த அமுத சுரபியில் ஏறத்தாழ எல்லா வகை