பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/211

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


கடைச்சங்க காலம் 187 வெள்ளைத் தொகையும் அவ்வகை எண்பெறின் எள்ளறு கீழ்க்கணக் கெனவும் கொளலே.” 'ஐம்பது முதலா ஐந்நூ lறா ஐவகைப் பாவும் பொருள்நெறி மரபின் தொகுக்கப் படுவது மேற்கணக் காகும்.' 'அடிகிமிர் பில்லாச் செய்யுள் தொகுதி அறம் பொருள் இன்பம் அடுக்கி அவ்வகைத் திறம்பட வுரைப்பது கீழ்க்கணக் காகும்.” என்னும் நூற்பாக்களால் அறியலாம். இந்த நூற்பாக்களின் பொருள், பின்னால் ஒவ்வொரு நூலையும் பற்றித் தனித் தனியே ஆராயும்போது) தானே விளங்கும். 12. பத்துப் பாட்டு பதினெண் மேற்கணக்கில் பத்துப் பாட்டு' என்னும் தொகுப்பில் உள்ள பத்து நூல்களும் அடங்கும். இந்தப் பத்து நூல்களும் தொகை நூல்கள் இல்லையாயினும், இந்தப் பத்தை யும் சேர்த்துப் பத்துப்பாட்டு எனப்படுவது ஒரு தொகைப் பெய ராகும். அதாவது, இந்தப் பத்துநூல்களும் சேர்ந்த தொகுப்பு, பன்னிரு படலம்போல ஒரு தொகைநூலாக மதிக்கப்பெறும். இந்தத் தொகுப்பில் உள்ள ஒவ்வொரு பாட்டும் ஒரு நூலின் பெறுமானம் உடையது. இந்தப் பத்தினையும் பத்துப்பாட்டு’ என எண்ணிக்கையிட்டுக் கூறுவதல்லாமல், 'பாட்டு' எனப் பொதுவாக வெற்றுபடியாகக் கூறுவதும் உண்டு. இதனைத் தொல்காப்பியம்-செய்யுளியல்-பேராசிரியர் உரையில் உள்ள, 'இவ் வாற்றான்...... ஆசிரியவடி முந்நூற்றிருபத்து நான் கும் பாட்டினும் தொகையினும் வருமாறு கண்டு கொள்க. (50)' “...அவை ஆசிரியர் நூல் செய்த காலத்துளவாயினும், கடைச் சங்கத்தார் காலத்து வீழ்ந்தமையின், பாட்டினும் தொகையினும் அவற்றை நாட்டிக் கொண்டு செய்யுள் செய்திலர்; அவற்றுக்கு இது மரபிலக்கண மாகலி னென்பது இனி, பாட்டினும் தொகையினும் உள்ள சொல்லே மீட்டொரு காலத்துக்கு உரித்தன்றிப் போயின்..(80)" மேலே பேராசிரியர் உரையில் பாட்டு எனப்படுவது பத்துப்