பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/213

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


கடைச்சங்க காலம் - 189 கோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சி பட்டினப் பாலை கடாத்தொடும் பத்து.' என்னும் பழைய வெண்பாவால் அறியலாம். இனி, ஒவ்வொன் றையும் பற்றித் தனித்தனியே காண்போம்: 1. திருமுருகாற்றுப்படை: 317 அடிகள் கொண்ட, ஆசிரியப்பாவால் ஆன இந்தப் பாடலின் ஆசிரியர் நக்கீரர். முருகனை வழிபட்டு அருள் பெற்ற ஓர் அன்பன், எதிர்வந்த மற்றோர் அன்பனை நோக்கி முருகனை இன்னின்ன இடத்திலெல்லாம் சென்று, இன்னின்ன முறைப்படி வழிபடின் அருள் பெறலாம் என அவனை ஆற்றுப் படுத்துவதாக (வழிப்படுத்தியனுப்புவதாக) உள்ளது இந்நூல். இதில் முருகனது சிறப்பும், ஆறுபடை வீடுகளும், முருகன் தொடர்பான பல செய்திகளும் விளக்கப்பட்டுள்ளன. 2. பொருநர் ஆற்றுப்படை: 248 அடிகளையுடைய இடையிடையே வஞ்சியடி கலந்த ஆசிரியப்பாவால் ஆகிய இந்நூலின் ஆசிரியர் முடத்தாமக் கண்ணியார் ஆவார். பரிசு பெற்ற பொருநன் ஒருவன் மற்றொரு பொருநனைச் சோழன் கரிகாற் பெருவளத்தானிடம் ஆற்றுப்படுத்தி யனுப்புவதாக அமைந்துள்ளது இந் நூல். இதில், கரிகாற்பெருவளத்தான் சிறப்பும், இசை மாண்பும் பிறவும் இயம்பப்பட்டுள்ளன. (பொருநர்=ஆடிப்பாடுபவர்) 3. சிறுபாண் ஆற்றுப்படை: இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடிய இந்நூல், 269 அடிகள் கொண்ட ஆசிரியப்பாவால் ஆகியது. பரிசில் பெற்ற சிறு பாணன் ஒருவன் பெறாத சிறு பாணன் ஒருவனை ஓய்மாட்டு நல்லியக் கோடனிடம் ஆற்றுப்படுத்தி அனுப்பிய தாக உள்ளது இந்நூல். 4. பெரும்பா னாற்றுப்படை: 500 அடிகள் கொண்ட ஆசிரியப் பாவாலான இதனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடினார். பரிசு பெற்ற