பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடைச்சங்க காலம் 191 பாடல், 261 அடிகள் கொண்ட ஆசிரியப் பாவால் ஆன அகப் பொருள் நூலாகும். தலைவன் தலைவியரது களவுப் புணர்ச்சி யும், அது தொடர்பான அகப்பொருள் செய்திகளும் இப் பாடலில் நயம்பட நவிலப்பட்டுள்ளன. (குறிஞ்சி=புணர்தல்). குறிஞ்சிப் பாட்டு என்னும் இந் நூலுக்குப் பெருங் குறிஞ்சி என்ற பெயரும் உண்டு என்னும் செய்தியை, கபிலர் பாடிய பெருங்குறிஞ்சியில் வரைவின்றிப் பூ மயங்கிய வாறு காண்க." (தொல் - பொருள் - அகம் - 19) என்னும் நச்சினார்க்கினியர் உரைப்பகுதியாலும், ‘எருவை நறுந்தோடு என்னும் பரிபாடல் (19:77) தொடருக்குப் பரிமேலழகர் எழுதியுள்ள, 'எருவை யது நறுந்தோட்டையுடைய பூ; எருவை என்பது, எருவை செருவிளை மணிப்பூங் கருவிளை (குறிஞ்சிப்பாட்டு - வரி 68) எனக் கபிலர் பாடிய பெருங்குறிஞ்சியிலும் வந்தது' என்னும் உரைப்பகுதியாலும் நன்கறியலாம், 4. 9. பட்டினப்பாலை: பெரும்பாலும் வஞ்சியடிகளால் ஆகி ஆசிரிய அடிகளால் முடிவுறுவதும், 30 அடிகள் கொண்டதுமாகிய இந்தப் பாடல் ஒர் அகப்பொருள் நூலாகும். தலைவியைப் பிரிந்து செல்லவேண்டிய தலைவன், தலைவியைப் பிரியவியலாது எனக் கற்பனையாகத் தன் நெஞ்சிற்குக் கூறுவதாக, சோழன் கரிகாற் பெருவளத்தானைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு, கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது இந்நூல். (பட்டினம்=காவிரிப்பூம்பட்டினம்; பாலை = பிரிதல்) காவிரிப்பூம்பட்டினத்தானது பிரிவைப் பற்றிய அகப்பொருள் நூலாதலின் இப்பெயர் பெற்றது இது. இந்நூலில் சோழ நாடு - காவிரிப்பூம்பட்டினம் ஆகியவற்றின் சிறப்பும், வளமும், சோழனது மாண்பும், இவை தொடர்பான பல செய்திகளும் விதந்து குறிப்பிடப்பட்டுள்ளன, இந்நூலை இயற்றியதற்காக உருத்திரங்கண்ணனார் நூறாயிரக்கணக்கான பொன் பரிசு பெற்றதாகப் பல நூல்களில் கூறப்பட்டுள்ளது. பட்டினப் பாலை என்னும் பெயருடைய இந்தப் பாட்டு, பெரும்பாலும் வஞ்சியடிகளால் ஆகியிருத்தலின் வஞ்சி நெடும் பாட்டு' என யாப்பருங்கல விருத்தி, இலக்கண விளக்க