பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/216

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


192 தமிழ் நூல் தொகுப்புக் கலை உரை, தமிழ் விடுதூது முதலிய நூல்களால் வழங்கப்படு கிறது. 10. மலைபடு கடாம் : கூத்தர் ஆற்றுப்படை என்னும் வேறு பெயர் உடையதும், 583 அடிகள் கொண்ட ஆசிரியப் பாவால் அமைந்ததுமாகிய இந்நூலின் ஆசிரியர், இரணிய முட்டத்துப் பெருங்குன்றுார்க் கிழார் பெருங்கெளசிகனார் என்பவர். பரிசு பெற்ற கூத்தன் ஒருவன் பெறாத கூத்தன் ஒருவனை, செங்கண்மாத்து வேள் நன்னன்செய் நன்னனிடம் ஆற்றுப்படுத்தியதாக அமைந்திருப்பது இப் பாட்டு. இதில், நன்னன் தொடர்பான செய்திகளும் பிறவும் விவரிக்கப் பட்டுள்ளன. 'மலைபடு கடாம் என்பதற்கு, மலைபோன்ற யானை யின் பிளிறல் முழக்கம் என்பது கருத்து. இந்தத் தொடர் இந்நூலில் 'மலைபடு கடாஅம் மாதிரத்தியம் (348 ஆம் அடி) என இடையே ஒரிடத்தில் வந்துள்ளது. இஃது எடுப்பான தொடரா யிருப்பதால், இதையே நூலுக்குப் பெயராக வைத்துவிட்டனர். இவ்வாறு பெயர் வைப்பது அக்காலத்திய மரபு, இந்த நூல் கூத்தரைப் பற்றியதாதலின் இது கூத்தர் ஆற்றுப்படை எனவும் பெயர் வழங்கப்பெறும். இதனைத் "ஆசிரியப் பாட்டின் அளவிற்கு எல்லை ஆயிர மாகும் இழிபுமுன் றடியே. என்னும் தொல்காப்பியச் செய்யுளியல் (157 - ஆம்) நூற் பாவின்கீழ் நச்சினார்க்கினியர் எழுதியுள்ள, 'நீலமேனி வாலிழை பாகத் தொருவ னிருதாள் நிழற்கீழ், மூவகை புலகு முகிழ்த்தன முறையே - இது சுருக் கத்திற்கு எல்லை; கூத்தராற்றுப்படை தலையளவிற்கு எல்லை; மதுரைக் காஞ்சியும் பட்டினப் பாலையும் ஒழிந்த பாட்டேழும் ..இடையளவிற்கு எல்லை...' என்னும் உரைப்பகுதி தெற்றெனப் புலப்படுத்துகின்றது. நச்சினார்க்கினியர் உரையில் தரப்பட்டுள்ள, நீல மேனி!